இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!
இ மாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் என்பதை இதுவரை நாம் செவிவழிச் செய்தியாகவும், வல்லுனர்களின் கூற்றாகவும் கேள்விப்பட்டிருப்போம். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முதல்கட்ட நகர்வாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2009ம் ஆண்டிலேயே மத்திய அரசிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டில் உள்ள முப்பது ஜீவநதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறியது. இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுகள் முழுவடிவம் பெறுவதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பிலும் அபார உயர்வு ஏற்பட்டது. மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க