BSNL அல்ட்ரா- பாஸ்ட் அதிரடி

ஜியோவின் 100ஜிபி காலி : பிஎஸ்என்எல்-ன் 100ஜி அல்ட்ரா-பாஸ்ட் பிராட்பேண்ட் அறிமுகம்.!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் 100ஜி ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க்கை (என்ஜி-ஓடிஎன்) இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிராட்பேண்ட் வேகங்களை அதிகரிக்கவும், லேண்ட்லைன் மற்றும் மொபைல் சேவைகளை அதிகரிக்கவும் உதவுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் படி, இந்த திட்டம் 10ஜி திறனை அதிகரிக்கும் நோக்கம் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் உள்கட்டமைப்பின் 100ஜி திறன் கொண்டிருக்கும். இந்த திட்டத்தின் கீழ் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் சுமார் 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் வசதி வழங்கப்படும்.

இந்த மேம்படுத்தப்பட்ட திறன் லேண்ட்லைன், எப்டிடிஎச் மற்றும் மொபைல் சேவைகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு மிகவே சிறப்பான வழிகளில் உதவும். மேலும் இந்த வசதியானது அல்ட்ரா உயர்ந்த திறனை வழங்குவதன் மூலம் நிறுவன வியாபார பிரிவுகளை (Enterprise Business Segment) அதிகரிக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றின்படி இந்த என்ஜி- ஓடிஎன் ஆனது பார்த்நெட், ஸ்வான், மற்றும் என்கேஎன் போன்ற மத்திய அரசுத் திட்டங்களுக்கு உதவும். மறுபக்கம் இந்த பிஎஸ்என்எல் மற்றும் பைபர் ஹோம் கூட்டணி மூலம் நாட்டில் மேலும் பல சேவைகள் உருவாக்கம் பெறும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

தற்பொழுது 100 நகரங்களில் மொத்தம் 45 இடங்களில் ஏற்கனவே என்ஜி- ஓடிஎன் சேவை இயங்கி வருகின்றன. திட்டமிடடப்பட்டுள்ள மீதமுள்ள 55 நகரங்களில் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் என்ஜி-ஓடிஎன் வசதி செயல்படும்.

தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நாட்டிற்கு 24 மணிநேர சேவை ஆதரவு வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தற்போதைய மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 115 மில்லியன் ஆகும். மேலும் தற்போது அறிமுகமாகியுள்ள என்ஜி- ஓடிஎன் சேவையானது, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்றும் நம்பலாம்.

இந்த திட்டம் 99.99 சதவீத சிறந்த நெட்வெர்க்கை வழங்குவதற்கான நோக்கம் கொண்டது. இதற்காக 24 மணிநேரமும் ஆதரவு வழங்கும் ஒரு நெட்வொர்க் ஆபரேட்டிங் சென்டர் (என்.ஓ.சி) பெங்களூரில் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்