Bigboss Endemol Shine India யார் இந்த பிக் பாஸ்? தமிழ் தெரியாத யூனிட்!
Bigboss Endemol Shine India
யார் இந்த பிக் பாஸ்?
                            தமிழ் தெரியாத யூனிட்!
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் எண்டிமோல் (ENDEMOL) மீடியா கம்பெனி என்கிற நிறுவனம் முதல் முதலாக பிக்பிரதர் என்ற டி.வி. ரியாலிட்டி ஷோவை ஆரம்பித்தது. அந்த ஷோ செமத்தியாக ஹிட் அடிக்கவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு பிரபல டெலிவிஷன் சேனல்கள், தங்களுக்கு அதேபோன்ற கான்செப்டில் புரோக்கிராம் தயாரித்துத் தரும்படி கேட்க, உருவானதுதான் பிக் பாஸ். காப்பி ரைட் சட்டப்படி உலகின் எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் பிக்பாஸைத் தயாரிப்பதானாலும் அதன் உரிமைதாரர் எண்டிமோல் தான்.
பிரபல ஹாலிவுட் சினிமா கம்பெனியான 21 சென்சூரி ஃபாக்ஸ் மற்றும் அப்பல்லோ குளோபல் மேனேஜ்மெண்ட் கம்பெனிகளும் எண்டிமோலின் பங்குதாரர்கள். இந்தியாவில் எண்டிமோல் ஷைன் இந்தியா என்ற பெயருடன் களமிறங்கியுள்ளது. அந்த பிக்பாஸை தமிழில் எடுக்கும் உரிமையைப் பெற்ற ஸ்டார் விஜய் டி.வி. பல மாதங்களாக தீவிரமாக ஆலோசித்து, பலகட்ட பேச்சுவார்த்தைகள், மிகவும் காஸ்ட்லியான சம்பளம்(25 கோடி என்கிறார்கள்) பேசி கமல்ஹாசனை சம்மதிக்க வைத்தது. எண்டிமோலின் சட்டதிட்டங்களும் விதிமுறைகளும் கடுமையானவை.
பிக்பாஸின் பிதாமகனான எண்டிமோல் நிறுவனம் தனது விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. நிகழ்ச்சிகளை அந்தந்த மண்ணின் கலாச்சாரத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்கும் என்டிமோல், கேளிக்கைகளை மேற்கத்திய பாணியில் கையாளும் வகையில் தளர்த்திக் கொள்கிறது. அதனால், "பிக்பாஸ்' வளாகத்தை விட்டு அதன் பங்கேற்பாளர்களால் வெளியே வர முடியாது என்றாலும், வளாகத்துக்குள்ளும் அதனை ஒட்டியுள்ள இடங்களிலும் விருப்பப்படி பொழுதுபோக்க முடியும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்.
மொத்தம் 250 பேரை உள்ளடக்கிய யூனிட்டில் இருப்பவர்கள் அனைவருமே மும்பையைச் சேர்ந்தவர்கள். யாருக்குமே தமிழ் தெரியாது. (ரகசியம் காக்க இந்த ஏற்பாடு) உள்ளே இருப்பவர்களுக்காக வெளியே சமைப்பவர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள்.
 
 
Comments
Post a Comment