இந்து மதத்தில் பூணூல் அணிவதின் தத்துவம்

பூணூலை மார்பிலும் முதுகிலும் வரும் படி இடமிருந்து வலமாக அணியும் போது நமது உடல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. நமது உடலின் மேன்மையான காரியங்களைச் செய்யும் பகுதி அந்தப் பிரிவுக்கு மேலே போய் விடுகிறது. நமது சிந்தனைக்கும், இயக்கத்திற்கும் முக்கியமாகப் பயன்படும் மூளையுள்ள தலைப்பகுதி , நம்மை ஒவ்வொரு கணமும் செயற்படுத்தும் நல்ல இரத்தத்தை அளிக்கும் இருதயப் பகுதி - சுவாசப்பை ஆகியவை உள்ள பகுதி நாம் முக்கியமான காரியங்களை செய்ய உதவும். வலது தோள், கை ஆகியவை இந்த மேற்பகுதியில் உள்ளது.

இந்தப் பிரிவிற்குக் கீழே உள்ள பகுதி மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொதுவான கீழ்தர உணர்வுகளைத் தூண்டுபவை. பசியைக் காட்டி நம்மை எதையும் செய்யத் தூண்டுபவை. அதாவது பசியைக் காட்டி நம்மை எதையும் செய்யத் தூண்டும் வயிறு , இந்திரிய சுகத்துக்கான நமது பிறவி உறுப்புகள் ஆகியவை இங்கே கீழ்பகுதியில் அமைந்து விடுகின்றன. இப்படி, நம் உடலை இரு பகுதிகளாகப் பிரித்துக் காட்டுவது தான் பூணூல்.

அதாவது உயர்வான காரியங்களை செய்பவர் மேலோர் என்றும் தாழ்மையான காரியங்களை செய்பவர் கீழோர் என்றும் பூணூல் எடுத்துக் காட்டுகிறது. இந்த மேலோர், கீழோர் என்பது பிறப்பால் அல்ல, குணத்தாலே நிர்ணயிக்கப்படுகிறது. உயர்ந்த குடியில் பிறந்து இருந்தாலும் அவன் தாழ்ந்த காரியங்களை செய்வானாயின் கீழோன் என்கிற அற நூல்களின் தத்துவத்தை பூணூல் எடுத்து உரைக்கிறது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்