கோவிலை வணங்கும் முறை பற்றி ஆன்மிகத்தில் கூறப்படுபவை…

1. பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றுக்கு அருகே மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும். பிற இடங்களில் விழுந்து வணங்குதல் கூடாது.

2. கிழக்கு நோக்கிய கோவிலில் வடக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும். மேற்கு நோக்கிய கோவிலில் வடக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும்.

3. திருக்கோவில் மூடி இருக்கும் போதும், திருவிழாவில் சுவாமி உலாவரும்போதும், அபிஷேகம் நடைபெறும் காலத்திலும், சுவாமிக்குத் திரையிட்டு இருக்கும் போதும், பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.

4. தன்னைத் தானே ஒருபோதும் சுற்றக்கூடாது.

5. எக்காரணத்தை முன்னிட்டும் விக்கிரங்களைத் தொட்டு வணங்குதல் கூடாது.

6. விபூதியை நெற்றியில் பூசும்பொழுது விபூதி தரையில் சிந்த நேரிடும். அவ்வாறு சிந்துதல் கூடாது. மூன்று விரல்களினால் திருநீற்றை பூசுவது நன்மை தரும்.

7. ஆலயத்தின் உள்ளே எந்த சன்னதிகளிலும் விழுந்து வணங்கக்கூடாது.

8. மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவருக்கும் அவருக்கு எதிரில் இருக்கும் நந்தி, மயில், சிங்கம் போன்றவைகளுக்கு இடையே செல்லுதலோ வணங்குதலோ கூடாது.

9. புண்ணிய தீர்த்தங்களில் முதலில் காலை வைத்தல் கூடாது. நீரை கையால் அள்ளித் தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் பாதத்தை நனைக்க வேண்டும்.

10. கோயிலின் உள்ளே வீண்வார்த்தைகள் பேசாது, இறை நினைவோடு உள்ளத்தில் இறைவனை நினைத்து ஒரே மனதாக வணங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்