கண்துடிப்பு மூடநம்பிக்கையும் விஞ்ஞான பார்வையும்

ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும்

கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும்.

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க ஆரம்பிக்கும். ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும்.

கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து விடுபடலாம்.

சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும்.

கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும்.

ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்