உலகில் இன்றுவரைக்கும் விடை தெரியாமல் உள்ள சில மர்மங்கள் !

உலகில் மனித அறிவுக்கு எட்டாத வகையில் பல்வேறு மர்மங்கள் இன்றும் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவையாக, சரியான பதில் கிடைக்காமல் உள்ளன. உதாரணமாக, பெர்முடா முக்கோணம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும்.

இதுப்போன்று நிறைய இன்னும் பதில் கிடைக்காத பல்வேறு மர்மங்கள் இவ்வுலகில் உள்ளன. அதுமட்டுமின்றி, அப்படி மர்மங்களாக இருக்கும் விடயங்களுக்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு காரணத்தை சொல்லும் வகையில் மர்மங்களாகவே உள்ளன.

இங்கு அப்படி உலகில் அவிழ்க்க முடியாத அளவில் உள்ள சில மர்மங்களை பார்ப்போம்.

1) பெர்முடா முக்கோணம்

மர்ம முக்கோணம்! மரண முக்கோணம்! பேய் முக்கோணம் என்று பயமுறுத்தும் வகையில் அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணத்தில் மர்மங்களானது இன்னும் நீடித்துக் கொண்டு தான் உள்ளது.

அது என்னவென்றால், அந்த பகுதியில் கப்பல் சென்றாலோ அல்லது விமானம் பறந்தாலோ, அது மர்மமான முறையில் காணாமல் போய்விடும். இதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை.

2) டூரின் புனித துணி

நிறைய பேருக்கு இதனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தாலியில் உள்ள டூரின் நகரில் உள்ள புனித துணியும் மர்மமாகவே உள்ளது. அது என்னவென்றால் அங்குள்ள புனித துணியில் இயேசுவின் முகமானது பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதனை மக்கள் இயேசு இறந்த பின்னர் அவரது உடலைப் போர்த்தியதால், அதில் அவரது உருவமானது படிந்துள்ளது என்று நம்புகின்றனர். ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை.

3) பிரமீடு

எகிப்து நாட்டில் அமைந்துள்ள பிரமீடு பற்றியும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு காரணங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை அதன் உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படாமல் தான் உள்ளது.

4) ஏலியன்

மக்கள் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் விடயங்களில் ஒன்று தான் ஏலியன். ஆனால் சில ஆய்வாளர்கள் ஏலியன் என்ற ஒன்று இல்லை, அது ஒரு கற்பனையே என்ற சொல்கின்றனர். சிலரோ ஏலியன் உள்ளது என்று சொல்கின்றனர். இவற்றில் எது உண்மை என்று தெரியாமல் தான் உள்ளது.

5) உலகம் அழியப் போகிறது

பல வருடங்களாக, உலகமானது 2012 இல் அழிந்துவிடும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வருடத்தையே தாண்டி வந்துவிட்டோம். இருப்பினும் பலர் உலகம் அழியப் போவதைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

6) கோழிக் கதை

உங்களிடம் வந்து ஒருவர் முதலில் முட்டையில் இருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். இது காமெடியாக இருந்தாலும், இதற்கும் சரியான விடை கிடைத்ததில்லை.

7) பேய்

பேய் என்றாலே பலர் அஞ்சுவோம். மேலும் பேய் பற்றி பல கதைகளைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இந்த பேய் உள்ளதா. இல்லையா என்பது சரியாக தெரியாது. ஏனெனில் சிலர் பேய் உள்ளது என்றும், வேறு சிலரோ பேய் என்ற எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இதுவரை சரியான பதில் எதுவும் கிடைத்ததில்லை.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்