 
 
நவகிரகங்களில் ராகும்வும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி ஆடி மாதம் 11ம் தேதியன்று, அதாவது ஆங்கில மாதத்தில் நேற்று (ஜூலை 27ம் தேதியன்று) ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஆவணி 1ம் தேதி, அதாவது ஆகஸ்ட் மாதம் 17ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ஜாதகப் பலன்களுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கமும், கோயில் விசேடங்களுக்கு வாக்கியப் பஞ்சாங்கமும் பின்பற்றப்படுகிறது. ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது கிரகங்கள் வழங்குகின்றன என்கிறது சோதிட சாத்திரம். அதன்படி இந்த ராகு-கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான பலாபலன்கள் கிடைக்கும். ராகு-கேது கிரகங்களின் இணைப் பெயர்ச்சியினால் மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. ரிஷபம், மிதுனம், கடகம், ...