காற்றினிலே வரும் கேடு என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்?



மாரடைப்புக்கு முக்கிய காரணியான உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் புதிதாக ஒரு பீதியை கிளப்பி விட்டுள்ளனர். புகைபிடித்தல், உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது போன்றவற்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்.





இப்போது இந்த வரிசையில் மாசடைந்த காற்றும் இணைந்துள்ளதாக சீனாவின் சன் யாட்சென் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர். இக்குழுவின் தலைமை விஞ்ஞானி யுவானியுன்காய், ‘ஓசோனில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் சல்ஃபர் டை ஆக்சைடு போன்றவற்றை சுவாசிக்கும் மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. காற்றில் கலந்துள்ள கண்ணுக்குப் புலப்படாத தூசிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமாகின்றன.





ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்தினால் இதய நோய், பருமன் பிரச்னைகள் கொண்டவர்களை குறைந்த மற்றும் நீண்ட நேர கால அளவில் மாசடைந்த காற்றினை சுவாசிக்கச் செய்தோம். பிறகு, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு மேலும் உயர் ரத்த அழுத்தம் அதிகரித்ததை அறிய முடிந்தது.





நுண்ணிய துகள்களுக்கும், உயர் ரத்த அழுத்தத்துக்குமான இணைப்பில் ஆய்வுகளை தொடர இருக்கிறோம்’என்கிறார். சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரும் அமெரிக்க இதய சங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் மார்த்தா டேவிக்ளஸ் இந்தக் கண்டுபிடிப்பு பற்றி பேசுகையில், ‘மக்களின் ஆரோக்கியத்துக்கு எமனாகும் சுற்றுச்சூழல் கேட்டை அலட்சியமாக நினைக்கும் அரசாங்கங்களுக்கு இது ஓர் எச்சரிக்கைச் செய்தி.





சுற்றுச்சூழல் கேடுகளை குறைப்பது, காற்றின் தூய்மையை பாதுகாப்பது குறித்த விவாதங்களை தொடக்கி வைப்பதாக இந்தக் கண்டுபிடிப்பு உள்ளது. அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் இது அமைய வேண்டும்.





மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவை குறைக்கவும், ஆரோக்கியமான உணவு உட்கொள்வதையும், உடற்பயிற்சிகளின் அவசியத்தையும் அறிவுறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சூழல் கேடான இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்’என்று அறிவுறுத்துகிறார்.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்