கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்



கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும், உடல் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு கூற்று உள்ளது. ஆனால் அதில் சில விஷயங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அதிகாலையே உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம். ஏனெனில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும், இதனால்  உடல் சூடு அதிகரிக்கும்.



மற்ற நேரங்களில் குடிக்கும் தண்ணீர் அளவை விட அதிகமாக குடிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் வழியாக நீர்ச்சத்து குறைந்து விடும்.



மேலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை, காய்கறிகளை  உட்கொள்வது சிறந்தது. எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். 

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்:


நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்:



மேலும் இவையனைத்தையும் உடற்பயிற்சிக்கு பிறகு உட்கொள்வது நல்லது. உடற்பயிற்சி செய்யும் போது இருக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

பஞ்சாங்கம் என்றால் என்ன ?