புனிதமானது செவிலியர் பணியே








கைவிளக் கேந்திய காரிகை பிளாரன்ஸ் 
நைட்டிங்கேல் இங்கிலாந்தில் பிறந்த நாளை
வையகம் கொண்டாடும் செவிலியர் தினமாய் ! 

செய்யும் பணிகளில் பலவித முண்டு 
பொறுமை சகிப்புத் தன்மை கொண்டு 
செவிலியர் செய்வது தொழிலல்ல தொண்டு ! 

மருத்துவப் பணியின் உன்னத முணர்ந்து 
மனித நேயம் கொண்டே சுழல்வார் 
மனமது கோணாது சேவைகள் புரிவார் ! 

மருத்துவர் சொல்லை சிரமேற் கொள்வார் 
மறுக்காமல் மறக்காமல் அவர்பணி முடிப்பார் 
மகத்துவம் மிக்கது செவிலியர் பணியே ! 

காலநேரம் கருதாமல் பாரபட்சம் பாராமல் 
கடமையே கண்ணாய் கருணையுடன் உழைப்பார் 
கவனிப்பில் நோயாளிக்கு கடவுளாய்த் தெரிவார் ! 

அறுவை சிகிச்சை நடக்கும் போதும் 
தீவிர சிகிச்சைக் குட்படும் போதும் 
செவிலியர் சேவை இதயம் நிறைக்கும் ! 

அன்பான பணிவிடையும் ஆறுதல் வார்த்தையும் 
நொந்த மனதிற்கு அருமருந்தாய் அமையும் 
நோயின் தாக்கத்தை வெகுவாய் குறைக்கும் ! 

புன்னகை மாறாது அசராது சோராது 
புத்துணர்வு பொங்க சேவகம்புரிவார் 
புனிதமானது புவனத்தில் செவிலியர் பணியே ...!!! 


(இன்று உலக செவிலியர் தினம் )




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

பஞ்சாங்கம் என்றால் என்ன ?