வீட்டில் மீன் தொட்டி வைக்க சில விதிமுறைகளும், வழிமுறைகளும்!!!
பறவைகளுக்கு அடுத்து விதவிதமான வண்ணங்களைக் கொண்டு அனைவரையும் ஈர்ப்பது மீன்கள்தான்.
பொழுது போக்கிற்காகவோ, விளையாட்டுக்காகவோ, பணத்திற்காகவோ,
வாஸ்துவிற்காகவோ, அலங்காரத்திற்காகவோ மீன் வளர்ப்பதை பயன்படுத்தப்படுகிறது.
சீனாதான் முதன்முதலில் இதனை அறிமுகபடுத்தினார்கள். பின்பு அது எல்லா இடங்களிலும் பரவி இந்தியாவிலும் குடியேறியது.
உலகத்தில் 5 மில்லியன் பேர்களின் வீட்டில் மீன் வளர்க்க படுகிடுகின்றன என்பது குறிப்பிடதக்கது.
மீன் தொட்டியை வீட்டில் வைக்க விதிமுறைகளும், வழிமுறைகளும்...
எத்தனை மீன்கள் வளர்க்க போகிறோம் என்பதை முன்பே தீர்மானித்துக்கொண்டு தொட்டியை தேர்வு செய்யவும்.
தொட்டி செவ்வகம் வடிவில் இருக்க வேண்டும்.
அதனின் நாலு முனைகளும் திக்காக இருக்க வேண்டும்
மேற்கூரை கண்டிப்பாக இருக்கவேண்டும், அதுதான் தூசிகளை உள்ளே செல்லாமல் தடுக்கும்.
தொட்டியை சூரிய வெளிச்சத்திற்கு நேரடியாக வைக்க கூடாது.
தொட்டியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க கூடாது.
தொட்டியில் கூர்மையான கற்களை அனுமதிக்க வேண்டாம்.
தண்ணீரில் வளர கூடிய செடிகளை தொட்டியில் வளக்கலாம் ஆனால் அது எந்த வகையிலும் மீனை பாதிக்ககூடாது.
மிகவும் சூட்டை வெளிப்படுத்தும் லைட்டை மீன் தொட்டியில் பயன்படுத்த வேண்டாம்.
டேங்க் கிளீனர் மீனை தொட்டியில் வளத்தால் அழுக்குகளை அது உணவாக்கி கொள்ளும்.
புழுக்குள், கொசு முட்டைகள், அல்ல பெரிய மீன்களுக்கு சிறிய மீன்களை உணவாக கொடுக்கலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது உணவு அளிக்க வேண்டும்.
முதன்முதலில் மீனை வளர்ப்பவர்கள் கௌரமி, காட் பிஷ்ஷை தேர்வு செய்யலாம், பின்பு கோல்டன் பிஷ்ஷை வளருங்கள்.
மோட்டார் வைத்து மீன்களுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீரை அனுப்பலாம்.
தண்ணீர் போர் தண்ணீராய் இருந்தால் நல்லது.
வாங்கி வந்த மீன்களை உடனே தொட்டியில் விடாமல் மெல்ல மெல்ல அதனை தொட்டியில் விடவும்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை தொட்டியை கட்டாயம் சுத்தம் செய்யவும்.
வீட்டு வாசலுக்கு இடப்பக்கம் மீன் தொட்டி இருந்தால் மிகவும் நல்லது.
Comments
Post a Comment