Posts

Showing posts from May, 2018

5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது Whats App!

Image
பிரபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது வெளியிட்டுள்ள தனது beta வெர்சன் 2.18.159-ல் 5 புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது! மொபைல் போன் இல்லாமல் தற்போது மனிதர்கள் வாழ்வது கடினமாகிவிட்டது, அதே வேலையில் WhatsApp இல்லாத போனை பார்பது அரிதாகிவிட்டது. தனது வாடிக்கையாளர்களை கவர WhatsApp-ம் பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய 5 வசதிகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 1. WhatsApp குரூப் காலிங் வசதி ஆண்ட்ராய்ட் 2.18.145+ மற்றும் iOS 2.18.52 இயங்குதளத்திற்கு தற்போது குரூப் காலிங் வசதி அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக தனி நபர்களுடன் வீடியோ கால் செய்யும் வசதி செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது பல நண்பர்களுடன் வீடியோ கால் செய்ய குரூப் காலிங் வசதி அறிமுகம் செய்துள்ளது! 2. Click to Chat வாடிக்கையாளர்கள் தங்களது தொடர்புகளில் சேர்க்கப்படாத நபர்களுக்கு, தனியாக செய்திகளை அனுப்ப WhatsApp வழி வகுக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் "api.whatsapp.com/send?phone=" என்ற இணைப்பினை தங்களது ஸ்மார்ட்போனில் திறந்து அதில் புது நபர்களுக்கு செய்திகளை அனுப்பலாம். 3. நீக்

அகத்தியர் கூறும் குளியல் முறை

Image
உடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம், நீராடல். ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப்படுத்திருக்கிறார். அதுபற்றி பார்க்கலாம். * குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் உத்தம திசைகள். கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் வலி வந்து சேரும். * ஒவ்வொருவரும் தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் குளிப்பதற்கு முன்பாக முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ‘ஓம்’ என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் ‘இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். * அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. எனவே தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து

கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

Image
கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும், உடல் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு கூற்று உள்ளது. ஆனால் அதில் சில விஷயங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதிகாலையே உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம். ஏனெனில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும், இதனால்  உடல் சூடு அதிகரிக்கும். மற்ற நேரங்களில் குடிக்கும் தண்ணீர் அளவை விட அதிகமாக குடிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் வழியாக நீர்ச்சத்து குறைந்து விடும். மேலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை, காய்கறிகளை  உட்கொள்வது சிறந்தது. எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடிப்பது உடல் சூட்டை தணிக்கும்.  நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்: நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்: மேலும் இவையனைத்தையும் உடற்பயிற்சிக்கு பிறகு உட்கொள்வது நல்லது. உடற்பயிற்சி செய்யும் போது இருக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.

எந்த ராசிக்கு எந்த கோயில்

Image
பன்னிரண்டு ராசியினரும் தரிசிக்க வேண்டிய அதிர்ஷ்டக்கோயில், வழிபாடு முறைகள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.  மேஷம் சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தன்று திருச்செந்துார் முருகனை தரிசியுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யுங்கள். தொழிலில் வருமானம் பன்மடங்கு உயரும். ரிஷபம் திருவாதிரை நட்சத்திரத்தன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதரை வழிபடுங்கள். திருமணத்திற்கு பொருளுதவி செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். மிதுனம் பூர நட்சத்திரத்தன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டைக்கு அருகிலுள்ள பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். முதியோருக்கு உதவிட விருப்பம் நிறைவேறும்.  கடகம் திங்கட்கிழமை அல்லது பூரம் நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிபடுங்கள். மனதில் மகிழ்ச்சி நிலைக்க திருமாங்கல்யம் வாங்க பணஉதவி செய்யுங்கள். சிம்மம் சுவாதி நட்சத்திரத்தன்று சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரியிலுள்ள குருராஜரான ராகவேந்திரரை வணங்குங்கள். தொழு நோயாளிக்கு உதவி செய்ய நிம்மதி கிடைக்கும்.  கன்னி சதயம் நட்சத்திரத்தன்று திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் கோயில

புனிதமானது செவிலியர் பணியே

Image
கைவிளக் கேந்திய காரிகை பிளாரன்ஸ்  நைட்டிங்கேல் இங்கிலாந்தில் பிறந்த நாளை வையகம் கொண்டாடும் செவிலியர் தினமாய் !  செய்யும் பணிகளில் பலவித முண்டு  பொறுமை சகிப்புத் தன்மை கொண்டு  செவிலியர் செய்வது தொழிலல்ல தொண்டு !  மருத்துவப் பணியின் உன்னத முணர்ந்து  மனித நேயம் கொண்டே சுழல்வார்  மனமது கோணாது சேவைகள் புரிவார் !  மருத்துவர் சொல்லை சிரமேற் கொள்வார்  மறுக்காமல் மறக்காமல் அவர்பணி முடிப்பார்  மகத்துவம் மிக்கது செவிலியர் பணியே !  காலநேரம் கருதாமல் பாரபட்சம் பாராமல்  கடமையே கண்ணாய் கருணையுடன் உழைப்பார்  கவனிப்பில் நோயாளிக்கு கடவுளாய்த் தெரிவார் !  அறுவை சிகிச்சை நடக்கும் போதும்  தீவிர சிகிச்சைக் குட்படும் போதும்  செவிலியர் சேவை இதயம் நிறைக்கும் !  அன்பான பணிவிடையும் ஆறுதல் வார்த்தையும்  நொந்த மனதிற்கு அருமருந்தாய் அமையும்  நோயின் தாக்கத்தை வெகுவாய் குறைக்கும் !  புன்னகை மாறாது அசராது சோராது  புத்துணர்வு பொங்க சேவகம்புரிவார்  புனிதமானது புவனத்தில் செவிலியர் பணியே ...!!!  (இன்று உலக செவிலியர் தினம் )

27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்

Image
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.  அசுவனி - தனவந்தன், நீதிமான், பரணி - கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி, கிருத்திகை - கல்விமான், அசடு, ரோகிணி -  புலமைமிக்கவன், செல்வந்தன் மிருகசீரிஷம் - சத்தியவான், தனவான், திருவாதிரை - வசியன், சுயநலவாதி, புனர்பூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன், பூசம் - பக்திமான், சுகவாசி, ஆயில்யம் - முன்கோபி, ஸ்திரீதுவேசி, மகம் - பலவான், ஸ்திரீதுவேசியன், பூரம் - நீதிமான், ஆஸ்திகன், உத்திரம் - யோகவான், சுகபோகி, அஸ்தம் - ஆஸ்திகன், அறிஞன், சித்திரை - காரியவாதி, ஏழை, சுவாதி - பக்திமான், கலகக்காரன், விசாகம் - கல்விமான், சாமர்த்தியன், பூராடம் - செல்வந்தன், உபகார், உத்திராடம் - திறமைசாலி, பலவான், திருவோணம் - பொதுநலவாதி, தருமவான், அவிட்டம் - கம்பீரமானவன், அவசரக்காரன், சதயம் - நல்லவன், பிடிவாதக்காரன், பூரட்டாதி - கலைஞன், கீர்த்தியுடையவன், உத்திரட்டாதி - செல்வந்தன், திறமைசாலி, ரேவதி - இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி (அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்)

கோவில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்?

Image
கோவில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோவில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்? அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். "ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துக்குள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ, உ, ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒருவித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது. நாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அத

கிருஷ்ணர் ஏன் கர்ணனை கொன்றார்?: ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

Image
மகாபாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக பின்பற்றும் சிலரும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் க்ரித்னர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிற போதும், சிலர் இப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கர்ணன் மற்றும் கிருஷ்ணருக்கு இடையே ஏற்பட்ட யுத்தம், நேர்மையான பாண்டவர்கள் மற்றும் சுய நேர்மையை கொண்ட கர்ணனுக்கு இடையே நடந்த போர், அதில் உயிரிழந்த பலர், போன்றவைகளைப் பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம். கர்ணனுக்கு ஆதரவாக இருந்த கிருஷ்ணர் மகாபாரதத்தில், மிக அரிதாக, ஏன் சொல்லப்போனால் ஒரு இடத்தில் கூட, கர்ணனைப் பற்றி பகை உள்ளத்துடன் கிருஷ்ணர் எங்குமே பேசவில்லை. சொல்லப்போனால், பல இடங்களில் கர்ணனின் புகழை தான் கிருஷ்ணர் பாடியுள்ளார். தன் ஆற்றல்களைப் பற்றி பெருமையாக பேசிய போதும், கர்ணனைப் பற்றி இழிவாக பேசிய போதிலும், அர்ஜுனனை சில முறை கிருஷ்ணர் எச்சரித்துள்ளார். பாண்டவர்களின் நேர்மையான நோக்கத்திற்கு ஆதரவு அளித்து, தன் நண்பனாகிய துரியோதனனுக்கு குருட்டுத்தனமாக ஆதரவு அளிக்க வேண்டாம் என கிருஷ்ணரே கர்ணனிடம் கூறியுள