Posts

தீபாவளியின் சிறப்புகள்

Image
கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன அவை: 1. ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள். 2. மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள். 3. புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள். 4. சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம். 5. குருகோவிந்த்சிங் சீக்கியமத அமைப்பான 'கல்சா'வை அமைத்த தினம். 6. சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்டநாள். 7. நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள். 8. கோவர்த்தன பூஜை செய்யும் நாள். 9. மாவலிபூஜை செய்யும் நாள். 10. வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள். 11. ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள். (ராமாயண காலத்திற்கு பிறகுதான் தீபாவளி வந்தது. ஆனால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள். ஐப்பசி மாதம் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை, சுக்கிலபட்ச பிரதமை நாள்) 12. தீபாவளி தினத்தை அரசு விடுமுறை என அறிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடும்படி செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் என அவர் எழுதிய 'அயினி அக்பர்' என்ற நூல

தீபாவளியன்று வீடுகளில் தீபம் ஏற்றுவது ஏன்?

Image
நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள்.  அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவாக இருந்த ஜோதிலட்சுமியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிபோனார்கள் அசுரர்கள்.  திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றிவைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.

குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்.!!

Image
நமது வீட்டில் இருக்கும் செல்லக்குழந்தைகள் விளையாட செல்வது வழக்கம். அப்போது எதிர்பாராமல் அவர்கள் விழுந்துவிட்டால் அவர்கள் அழுதுகொண்டே அம்மா நான் விழுந்துவிட்டேன் என்று அழுதுகொண்டே வருவதும்., அவர்களை கோபத்தோடு அழைத்து அவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை சமாதானம் செய்வதும் வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடப்பதாகும்.  குழந்தைகள் விளையாடும் போது நிலைதடுமாறி விழுந்து அவர்கள் இரத்த காயத்துடன் வருவது வழக்கமான ஒன்றே., அதனை கண்டு பெற்றோர்கள் அதிகளவில் மனஉளைச்சலுக்கு உள்ளாக தேவையில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் விழுந்துவிட்டால்., அந்த சமயத்தில் இரத்த காயத்துடன் வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.  குழந்தைகள் கீழே விழுந்து இரத்தம் வரும் பட்சத்தில் குழாயில் இருந்து வரும் சுத்தமான சாதாரண நீரால் கழுவ வேண்டும் மற்றும் காயத்தில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.  அந்த காயத்தின் மீது இரத்தம் வரும் பட்சத்தில் காயத்தினை சுத்தமான துணியின் உதவியால் நன்றாக அழுத்தி கட்டுப்போட வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு தற்போதுதான் "டெட்டனஸ் டெக்ஸாய்டு" போடப்பட்டிருந்தால் மீண்

நட்ஸ் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்!!

Image
பீனட்,கர்ப்ப காலத்தில் நிச்சயம் சாப்பிட வேண்டிய ஒன்று. வைட்டமின் ஈ இருப்பதால், ஞாபக திறனை அதிகரிக்கும். மன அழுத்தத்தை போக்கி இருதய நோய் அபாயத்தை தவிர்க்கும். முந்திரி,இரும்பு சத்து, மக்னீஷியம், கொழுப்பு, ஓலிக் அமிலம் இருப்பதால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து காக்கிறது. இதய ஆரோக்கியம் மேம்பட்டு, எலும்புகள் உறுதியாகின்றன. இதில் காப்பர் நிறைந்திருப்பதால் உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நல்லது. பிரேஸில் நட்ஸ்,புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை அழித்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்பு உள்ளதால் உடலில் அதிகபடியாக இருக்கும் LDL கொழுப்பு குறைக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள்

Image
  ஆப்பிள்:  ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே. ஆப்பிளில் உள்ள விட்டமின் பெருங்குடல் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது! ஸ்ட்ராபெர்ரி:  பாதுகாப்பு தரும் பழம். இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட மொத்த Antioxidant சக்தி இருப்பதால், இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.   ஆரஞ்சு:  இனிப்பான மருந்து. ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது. தர்பூசணி:  மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால், அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி, பொட்டாசியம் ஆகியவை.   கொய்யா & பப்பாளி:  இவை இரண்டுமே விட்டமின் சி நி

சுவாசத்திற்கும் உங்கள் ஞாபகத்திறனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு..! அறிந்து கொள்வோம்!

Image
சுவாசத்திற்கும் உங்கள் ஞாபகத்திறனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு என்பதை பற்றி நரம்பியல் துறை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறது.சுவாசம் என்பது மூக்கின் வழி இருப்பது தான் சிறந்தது. சுவாசம் சீராக இருக்கும்போது, உடல் உறுப்புகள் மற்றும் அரோக்கியம் சீராக இருக்கும். வாயை மூடி கொண்டு மூக்கு வழியாக சுவாசிப்பவர்களை காட்டிலும் வாய் வழியாக சுவாசிப்பவர்களிடம் துர்நாற்றம் குறைவாக இருக்கிறது என்று ஆய்வரிக்கை தெரியவித்துள்ளது.  மூக்கு வழியாக சுவாசம் சீராக இருக்கும்போது ஞாபகத்திறனும், உணர்ச்சிக்கும் சீராக இருக்கும். உங்கள் சுவாசம் சீராக இருக்கும்போது, உடல், சிந்தனை, ஞாபகத்திறன் ஆகியவை மேம்படும். இந்த ஆய்வில் மூளையின் செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. விலங்குகளிடமும் மனிதர்களிடமும் சுவாசம் மூக்கு அல்லது வாய் வழியாக இருக்கும்போது எப்படியான விளைவுகள் வரும் என்பது தெரிய வந்தது.சுவாச பிரச்சனைகளே மற்றும் உடல் உபாதைகளுக்கு காரணமாகிவிடும். அதனால் சுவாசத்தை மேம்படுத்த யோக பயிற்சி அல்லது சுவாச பயிற்சி செய்யலாம்.

தீர்த்தமாடும் முறை

Image
கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரையில் தண்ணீரில் நனையும்படி நிற்க வேண்டும். மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்யவேண்டும். முதல் முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத் துளைகளை கைகளால் மூடி மூழ்க வேண்டும். இரவில் தீர்த்த நீரில் மூழ்கக் கூடாது; சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.