குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்.!!






நமது வீட்டில் இருக்கும் செல்லக்குழந்தைகள் விளையாட செல்வது வழக்கம். அப்போது எதிர்பாராமல் அவர்கள் விழுந்துவிட்டால் அவர்கள் அழுதுகொண்டே அம்மா நான் விழுந்துவிட்டேன் என்று அழுதுகொண்டே வருவதும்., அவர்களை கோபத்தோடு அழைத்து அவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை சமாதானம் செய்வதும் வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடப்பதாகும். 



குழந்தைகள் விளையாடும் போது நிலைதடுமாறி விழுந்து அவர்கள் இரத்த காயத்துடன் வருவது வழக்கமான ஒன்றே., அதனை கண்டு பெற்றோர்கள் அதிகளவில் மனஉளைச்சலுக்கு உள்ளாக தேவையில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் விழுந்துவிட்டால்., அந்த சமயத்தில் இரத்த காயத்துடன் வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

குழந்தைகள் கீழே விழுந்து இரத்தம் வரும் பட்சத்தில் குழாயில் இருந்து வரும் சுத்தமான சாதாரண நீரால் கழுவ வேண்டும் மற்றும் காயத்தில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

அந்த காயத்தின் மீது இரத்தம் வரும் பட்சத்தில் காயத்தினை சுத்தமான துணியின் உதவியால் நன்றாக அழுத்தி கட்டுப்போட வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு தற்போதுதான் "டெட்டனஸ் டெக்ஸாய்டு" போடப்பட்டிருந்தால் மீண்டும் தடுப்பூசி போடத்தேவையில்லை. 



மேலும் குழந்தைகளுக்கு எந்தவிதமான காயங்களோ அல்லது பூச்சிக்கடியோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்., தேவையில்லாமல் ஒன்றும் செய்து என்று குழந்தைகளின் உடல் நலத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் பவுடர், சந்தனம், மஞ்சள் மற்றும் காப்பித் தூள் போன்ற பொருட்கள் காயத்தில் போடக்கூடாது. 
 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி