பூஜையின் போது சாம்பிராணி ஏன்?








கோவில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவர்.


பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.


இன்று சாம்பிராணியை பெரும்பாலும் எல்லோராலும் உபயோகப்படுத்த முடிவதில்லை. எனவே, பாரம்பரியமான சாம்பிராணிக்குப் பதிலாக, இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் விதவிதமான ஊதுபத்திகள் மூலம் தூப ஆராதனையை இறைவனுக்குச் செய்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது ஒரு சம்பவம்.


வைணவ ஆசார்யர் ஸ்ரீராமானுஜருடைய சீடரான கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமைப் பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், தனது பிரபந்த உரை நிகழ்ச்சிகளின்போது மிகச் சிறந்த விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு முறை திருவாய்மொழிக்கான வியாக்கியானத்தை அளித்தபோது, பரிவதிலீசனைப் பாடி என்ற திருவாய்மொழிப் பாசுரத்துக்கு விளக்கமளித்தார். 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்