சத்து மாத்திரையா, சத்தான கேரட்டா எது உங்களுக்கு வேண்டும்


சத்தானதை சாப்பிடுகிறீர்களா? இல்லையென்றால் இந்த சத்துமாத்திரைகளைப் போடுங்கள் என்று மருத்துவர்கள் அளிக்கும் மாத்திரைகளை விட சத்தானவை காய்கறிகள். மாத்திரைகளை தூக்கியெறிந்து தினம் ஒரு காய்கறி என்று எடுத்து பாருங்கள்.உடலின் பாதை ஆரோக்யத்தை நாடி செல்கிறது என்பதை உணர்வீர்கள். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள். எல்லா காய்கறிகளும் எடுக்க வேண்டும். சில காய்கறிகள் அனைவருக்கும் பிடிக்கும். அவற்றில் ஒன்றுகேரட்.



கேரட்டை எப்படி சாப்பிடலாம்? கேரட் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதைப் பச்சையாகவே சாப்பிடலாம் ருசியாக இருக்கும். காய்கறி சாலட் ஆக செய்தும் சாப்பிடலாம். கேரட்டைத் துருவி தயிரில் சேர்த்தும் சாப்பிடலாம். கேரட்டை அல்வாவாக செய்து சாப்பிடலாம். நிறைய சத்துக்கள் இருக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது. இது எல்லோருக்குமே தெரியும். ஆனால் கேரட்டை எல்லா வயதினரும் சாப்பிடும்படி என்ன செய்யலாம்? ஆறுமாத குழந்தைக்கூடசாப்பிடும் வகையில் கேரட் சாறாக்கி கொடுக்கலாம். அறுபதுவயதுதாண்டியவர்கள் கூட குடிக்கலாம். இன்றுபாரம்பரியம் நோக்கி திரும்பியிருக்கும் மக்களின் கவனத்தை கவர வேண்டி பல பழச்சாறுதயாரிக்கும் நிறுவனங்கள் புதுமைகள் என்னும் பெயரில் விளம்பரம் செய்வது எல்லாமே பாரம்பரியமான பழைமையான பழக்கம்தான்.



கேர்ட் சாறு மிகவும் எளிமையானது. அதிக சத்துக்களைக் கொண்டது.மிகவும் முக்கியமானது அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில்பட்ஜெட்டுக்கும் ஏற்றது. வாரம் இருமுறை கேரட் சாறுஅருந்தினால்ஹீமோகுளொபின் அதிகரிக்கும். ஹிமோகுளொபின் குறையும் போது தான் உடல் அசதி,சோர்வு, பசியின்மை போன்ற பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கும். இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் கீரைகள், காய்கறிகள் செயல்படுகின்றன. கேரட் சாறு எப்படி தயாரிப்பது பார்க்கலாம்.

தேவை:

ஃப்ரெஷ் கேரட் -5

பால் -3தம்ளர்

தண்ணீர் - தேவைக்கு

சீரகத்தூள் - 3 சிட்டிகை

நாட்டுச்சர்க்கரை - இனிப்புக்கேற்ப.



செய்முறை:

கேரட்டை தோல்சீவி துருவியெடுக்கவும்.மிக்ஸியில் துருவிய கேரட்டைச் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.(குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுக்கும் போது மட்டும் வடிகட்டி சாறு பிழியலாம்.)மைய அரைத்த விழுதில்நன்றாக காய்ச்சிய ஆடை நீக்கிய பாலைச் சேர்த்து தண்ணீர் விட்டு சீரகத்தூளைச் சேர்த்து, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கவும். கோடைக்காலங்களில்ஃப்ரிஜ்ஜில் வைத்து குடிக்கலாம். குளிர்காலங்களில் அப்படியே குடிக்கலாம்.வயதானவர்களுக்கு சாறு பிழிந்து கொடுக்கும் போது எளிதில் ஜீரணமாகும்.அதற்குதான் சீரகத்தூளை சேர்க்கிறோம்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குஸ்நாக்ஸ் பதிலாக இந்தப் பழச்சாறு கொடுக்கலாம். சுறுசுறுப்பாக இயங்குவார்கள்.இல்லத்தரசிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும்கேரட் ஜூஸ் உற்சாகத்தை அளிக்கும். மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியாக உதிரும் ரத்தப்போக்கில் இழந்த ஆரோக்யத்தை மீட்டுக்கொடுப்பதில் கேரட்டும் ஒன்று.காஃபி, டீ போன்ற பானங்களுக்கு பதிலாக மாற்றாக கேரட் சாறு குடித்து பாருங்கள். சருமத்தின் பளபளப்பும் கூடும்.ஆற்றலும் அதிகரிக்கும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்