மூச்சுப்பயிற்சி முறையாகச் செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க


உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது.



நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.



பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். திருமூலர் தனது திருமந்திரம் நூலில் பிராணாயாமம் செய்யும் முறை குறித்து பாடலாக பாடியுள்ளார். அது பின்வருமாறு

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்

ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே. -(திருமந்திரம் -568)

விளக்கம்:

பதினாறு மாத்திரை அளவு இடப்பக்க நாசி வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக்காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம்.வலப்பக்க நாசி வழியே முப்பத்து இரண்டு மாத்திரை அளவில் வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் வெளியே விடுவது தந்திரமாகும்.இவ்வாறு பக்கத்தை மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.(குறிப்பு:இங்கே ஒரு மாத்திரை என்பது ஒரு நொடியைக் குறிக்கும்)

முதலில் இந்த அளவு செய்வது யாராலும் இயலாத காரியம்.எனவே இங்கே குறிப்பிட்ட அளவைக் குறைத்து செய்து பழகலாம்.அதாவது 16,64,32 என்பதை 8,32,16 என்ற அளவிலோ அல்லது 4,16,8 என்ற அளவிலோ குறைத்து முயற்சி செய்யலாம்.

இந்த தகவல் உங்களுக்குத் பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும். மேலும் இதுபோன்ற சுவையான தகவல்களுக்கு எங்களைப் பின்தொடரவும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்