வாழ்க்கையில் நலம் உண்டாக நவகிரகங்களின் மூல மந்திரம்!!











ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக மூல மந்திரம் உண்டு. அமைதியாகவும் தெளிவாகவும் ஆழ்ந்த கவனத்தோடும்  ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய மந்திரங்களை குறைந்தபட்சம் மும்மூன்று முறைகள் உச்சரிக்க வேண்டும்.






ஒன்பது  முறைகளும் உச்சரிக்கலாம். அவகாசம் இருப்பவர்கள் 27 முறைகளும், 54 முறைகளும், 108 முறைகளும் உச்சரிக்கலாம். குறைந்த அளவு உச்சரித்தாலும்கூட நிறைந்த ஈடுபாட்டையும், ஆழ்ந்த கவனத்தையும் செலுத்துவது அவசியமாகும்.





 



சூரிய மந்திரம்:

 

ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்.



 

செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன்; காச்யபரின் புதல்வன்; மிகவும் பிரகாசம் உடையவன்; இருட்டின் பகைவன்; எல்லாப்  பாவங்களையும் அழிப்பவன்; அப்பகலவனைப் பணிகிறேன்.

 



சந்திர மந்திரம்:

 

ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்

நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்.



 

தயிர், சங்கு, பனி போன்று வெண்மையானவன்; பாற்கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். ஸோமன்  என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன். சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன். அச்சந்திரனைப் பணிகிறேன்.

 



செவ்வாய் மந்திரம்:

 

தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்

குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்.



 

பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன்; மின்னலைப் போன்ற ஒளியினன்; குமாரன்; சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன்  எனும் செவ்வாயைப் பணிகிறேன்.





 



புதன் மந்திரம்:

 

ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்

ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.



 

ஞாழல் மொட்டுப்போன்ற ஒளியுடையவன். உருவத்தின் அழகில் உவமை அற்றவன். சந்திரனின் குமாரன். ஸெளம்யமானவன்.  அந்த புதனைப் பணிகிறேன்.





 



குரு மந்திரம்:

 

தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.



 

தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன்; பொன்னன்; மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன்; அந்தப் பிருஹஸ்பதியை  வணங்குகிறேன்.





 



சுக்கிர மந்திரம்:

 

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.



 

பனி, முல்லை, தாமரை நூல் போன்ற வெண்மையான நிறமுடையவன்; அசுரர்களின் குரு; எல்லாச் சாத்திரங்களையும்  உரைப்பவன். பிருகுவின் புதல்வன்; அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன்.





 



சனி மந்திரம்:

 

நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்



 

மை போன்று கறுத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச்  செல்லும் அந்தச் சனியை நமஸ்கரிக்கிறேன்.





 



ராகு மந்திரம்:

 

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்

ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.



 

பாதி உடல் கொண்டவன்; பெரும் வீரன்; சந்திர சூரியர்களைப் பீடிப்பவன்; அகர ஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த  ராகுவைப் பணிகிறேன்.





 



கேது மந்திரம்:

 

பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்

ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.



 

புரசு மரத்தின் பூப்போன்ற செந்நிறம் கொண்டவன். நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவன். கோபி; கோபத்தின்  உருவுடையோன். அந்தக் கேதுவைப் பணிகிறேன். 





 



இந்த மந்திரங்களை உச்சரிப்பது உங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நலம் உண்டாவதற்காகவும்  தான் என்பதில் சந்தேகமில்லை.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி