வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள்... என்னென்ன தெரியுமா?
செய்தி பரிமாற்றத்தில் சிறந்து விளங்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்து புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை,
1. ஸ்வைப் டூ ரிப்ளை: (Swipe to Reply)
ஸ்வைப் டூ ரிப்ளை ஏற்கெனவே வாட்ஸ் அப் iOSல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பேட்டா வெர்சனில் சோதனையில் உள்ளது. ஸ்வைப் டூ ரிப்ளை என்பது ரிப்ளை செய்யவேண்டிய செய்தியின் மீது விரல் வைத்து வலது புறமாக நகர்த்தினால் ரிப்ளைக்கான வசதி வரும். தற்போது குறிப்பிட்ட செய்தியின் மீது நீண்ட நேரம் அழுத்துவதன் மூலமே ரிப்ளை வசதி பெற முடியும்.
2. பிக்சர் இன் பிக்சர் மோட்: ( Picture-in-Picture mode)
PiP என்று அழைக்கப்படும். பிக்சர் இன் பிக்சர் மோட் iOSல் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டுக்கு வர உள்ளது. PiPன் படி பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூபின் வீடியோ லிங் அனுப்பப்பட்டால், அந்த வீடியோ சிறிய திரையில் ஒளிபரப்பாகும். தேவை என்றால் அந்த வீடியோவை முழு திரையிலும் மாற்றி பார்க்கும் வசதியும் உள்ளது.
3. ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ் (ads for Status)
ஸ்டேட்டஸில் விளம்பரம் ஓடும் வசதியை வாட்ஸ் அப் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்கள் எந்த விதத்திலும் பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.
4. பிஸ்கட் ஸ்டிக்கர் பேக்: (‘Biscuit’ sticker pack)
வாட்ஸ் அப் தனது இமோஜிகளையும், ஸ்டிக்கர்களையும் அடிக்கடி புதுப்பித்து வருகிறது. அதன்படி பிஸ்கட் ஸ்டிக்கர் பேக் என்ற புதிய வசதியின் கீழ் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.
5. இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன்: (inline image notifications)
இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் ஆண்ட்ராய்டின் பேட்டா வெர்சன் 2.18.291ல் சோதனையில் உள்ளது. இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் என்பது வாஸ்ட் அப்பில் நமக்கு அனுப்பப்படும் புகைப்படங்களை சிறிய அளவில், நோட்டிஃபிகேசனிலேயே பார்க்கும் வசதியாகும். இந்த வசதி புகைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜிஃப் மற்றும் வீடியோக்களுக்கு பொருந்தாது என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment