திருமணத்தில் தாரை வார்ப்பது ஏன் ?







துறவிக்குரிய தகுதியோடு வாழ்ந்தவர் மன்னர் ஜனகர். இவர் தன் மகளான சீதைக்கு, க்ஷத்திரிய குலதர்மப்படி சுயம்வரம் நடத்தினார். அதன்படி, சிவதனுசு என்னும் வில்லை ஒடிப்பவருக்கே தனது பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார். ராமன் அந்த வில்லை ஒடித்தார். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது, ராமனின் கைகளில் சீதையின் கைகளைச் சேர்த்து வைத்த ஜனகர், ஒரு மந்திரம் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார். அந்த மந்திரத்தின் பொருள் இதுதான்.


"இல்லற வாழ்வில் நிழல் போல் என்றும் பிரியாமல் உன்னுடன் இவள் இருப்பாள். இவளது கையை நீ பிடிப்பதால், உனக்கு பெருமையும், நன்மையும் உண்டாகட்டும். தூய்மையானவளும், பதிவிரதையுமான சீதையால் உன் வாழ்வில் பெருமை சேரட்டும்,''. இந்த மந்திரத்தின்படி, சுயம்வர போட்டியில் வெற்றி பெற்றாலும், ஜனகர் தாரை வார்த்துக் கொடுத்தபிறகே, சீதை ராமனுக்கு உரியவள் ஆனாள். பெற்றோரின் சம்மதத்தோடு, திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணத்தில் தாரை வார்க்கும் சடங்கு இடம் பெறுகிறது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது சரியா ?