Posts

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2023

Image
தைப்பொங்கல் 2023! நாளை இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால், உங்களுடைய குடும்பத்தில், பொங்கல் பொங்கி வழிவது போல சந்தோஷமும் பொங்கி வழியும். பண்டிகை நாட்கள் என்றாலே நம்முடைய மனது முழுவதும் சந்தோஷம் நிறைவாக இருக்கும். அதிலும் இந்த தைத்திருநாள் வந்து விட்டால், நான்கு நாட்கள் சொந்த பந்தங்கள் சேர்ந்து, அவ்வளவு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். நகர்ப்புறங்களை ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் இந்த தைப்பொங்கல், திருவிழா போல கொண்டாடப்படும். இந்த வருடம் தைப்பொங்கல் 15.1.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வரவிருக்கின்றது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்த தைத்திருநாளை நாம் கொண்டாடுகின்றோம். சூரியன் இல்லை என்றால் இந்த பூலோகத்தில் ஒரு சின்ன உயிர் கூட வாழ முடியாது. நமக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுத்து, வாழ்வாதாரத்தை கொடுக்கக்கூடிய அந்த சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்த வருட தைப்பொங்கல் வந்திருப்பதால் இது சிறப்பு வாய்ந்த பொங்கலாக கருதப்படுகிறது. இந்த வருட தைத்திருநாள் அன்று வீட்டில் எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் நல்லது, மிக மிக எளிமையான முறையில் இந்த த

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று... இந்தியாவில் பார்க்க முடியுமா...??

Image
பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதன் காரணமாக சூரியனின் ஒளி பூமியை அடைய முடியாமல் போகிறது.. இந்த ஆண்டின் முதல் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது.. இந்த கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியும்.. ஆனால் அருணாச்சல பிரதேசம் , லடாக் போன்ற வடகிழக்கில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தெரியும். இது ரஷ்யா, கனடா மற்றும் கிரீன்லாந்தின் சில பகுதிகளிலிருந்து தெரியும் என்று நாசா கூறியுள்ளது. கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளை சேர்ந்தவர்கள் சூரிய கிரகணத்தைப் பார்ப்பார்கள். பெரும்பாலான பகுதிகளில், 2021 வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வு 01:42 PM (IST) மணிக்குத் தொடங்கும், அது 06:41 PM (IST) மணிக்கு உச்சத்தில் இருக்கும். தடுக்கப்படும் ஒளியைப் பொறுத்து பல்வேறு வகையான சூரிய கிரகணங்கள் உள்ளன. உதாரணமாக, சந்திரனும் பூமியும் ஒரு நேரடி வரியில் இருந்தால், நம் உலகின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சூரிய ஒளியைக் காண முடியும் மற்றும் பகலில் கூட வானம் இருட்டாக மாறும்

நாளை மட்டும் ஊரடங்கில்தளர்வு...?ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அனைத்து கடைகளும் மூடல்..?

Image
தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. நோய்த் தொற்று கட்டுக்குள் வராததால் மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் " கொரோனா காரணமாக கடந்த ஓராண்டு காலத்தில் விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து வருகிறோம்..ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.. தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு வந்துள்ளது.. முழு ஊரடங்கின் போது தொற்று குறைந்துள்ளதே தவிர, கட்டுப்படுத்த முடியவில்லை.. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார். இதே போல் இந்த கூட்டத்தில் கலந்து மற்ற கட்சி எம்.எல்..ஏக்களு

இன்று தங்கம் வாங்கினால் மகாலட்சுமி....உப்பு வாங்கினால்?

Image
சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் நாளில் வளர் பிறையில் வரும் திருதியை திதி அக்ஷய திதியாகும். கிருதாயுகத்தில் பிரம்மன் உலகை தோற்றுவித்தது இந்நாளில் தான். திரேதா யுகம் தொடங்கியதும் இந்நாளில்தான். பகீரதன் கடுமையாக தவம் புரிந்து பல போராட்டங்களுக்குப் பிறகு கங்கையை பூமிக்கு அழைத்து வந்ததும், கங்கை நீர் பூமியில் பட்டு புண்ணியமான தினமும் அக்ஷயதிருதி அன்றுதான். விஷ்ணு பகவானின் அவதாரமான பரசுராமர் அவதரித்தது இந்நந்நாளில்தான். அக்ஷய என்ற வார்த்தை சமஸ்கிருதத்தைக் கொண்டது. எப்போதும் குறையாதது என்னும் பொருளை கொண்டது. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அதே அட்சயம் என்றால் தேயாதது, குறையாதது, வளர்வது என்று பொருள். எல்லா நலன்களையும் அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில் நாம் வாங்கும் அனைத்தும் அடுக்கடுக்காய் சேரும் என்பது ஐதிகம். அதனால் விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டனர். இன்று அக்ஷய திருதியை என்றால் தங்கம் தான் வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தான் செல்வம் பெருகும் என்பதி

தமிழக அரசின் புதிய அறிவிப்பு கொரோனா அதிகரிப்பு காரணமாக மே-6'முதல் புதிய கட்டுப்பாடுகள் மளிகை, காய்கறிகள் கடைகள் மதியம் 12மணி வரை மட்டுமே அனுமதி

Image
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டும், வரும் மே 6 ஆம் தேதி முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. அண்மை காலங்களில் இந்திய அளவில் ஒரு சில நாட்களில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக,மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்திரப்பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த

COVID-19; உங்கள் உடம்பில் இந்த 7 அறிகுறிகள் தான் உங்கள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விட்டதாக குறிக்கின்றன.!

Image
இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் வீடுகளில் சிகிச்சை அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அது போன்ற சமயங்களில் இந்த மாதிரியான தகவல்களை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். கடுமையான மற்றும் சிக்கலான COVID-19 நோயாளிகளை குணப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி, மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டுள்ளது. முன்னோடியில்லாத சூழ்நிலைக்கு மத்தியில், எந்தவொரு இடத்திற்கும் பொருந்தக்கூடிய ஆக்ஸிஜன் டேங்கர்கள் நிறுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது தவிக்காமல் இருக்குமா என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டது. இதற்கிடையில், பல மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் வீடுகளில் சிகிச்சை அளிக்கு

ஏசியை புல் கூலிங்கில் வைத்து முகத்திற்கு கழுத்திற்கு என்று விதவிதமாக காற்று வாங்கும் நபர்களே., கவனம் தேவை.!!

Image
இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் குளிர்பதனப்படுத்தப்பட்டுள்ள அறைகளில் தங்களின் பணிகளையும்., வீடுகளில் அறை குளிரூட்டியை பொறுத்தியும் குளுமையான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து இனி காண்போம்.  குளிரூட்டியின் பயன்பாடு மூலமாக நமது சருமத்திற்கு அதிகளவு தீங்கானது விளைகிறது. நமது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு., சருமம் தனது வறட்சியை அடைகிறது. இதுமட்டுமல்லாது உதடுகளும் விரைவில் தனது வறட்சியை அடைந்து உலர்கிறது. அதிக நேரம் ஏசியில் அமர்ந்து இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான சூரிய ஒளியானது கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாக நமது உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.  ஏசியில் பணியாற்றும் சிலர் ஏசிக்கு நேரடியாக அமர்ந்து பணியாற்றி வருவது வழக்கம் அல்லது அவர்களுக்கு எதிராக ஏசியின் அமைப்பு அமையபெற்று இருக்கலாம். இதனால் சைனஸ் தூண்டப்பட்டு., மூக்கடைப்பு., தலைவலி மற்றும் குளிரால் காது அடைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும்., சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற