நாளை மட்டும் ஊரடங்கில்தளர்வு...?ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அனைத்து கடைகளும் மூடல்..?
இதே போல் இந்த கூட்டத்தில் கலந்து மற்ற கட்சி எம்.எல்..ஏக்களும் ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். எனவே தமிழகத்தில் இன்னும் 14 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது..
எனவே 2 வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதகவும், முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.. நாளை ஒரு நாள் தளர்வுகள் அறிவித்து விட்டு, மே 24- முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற தீவிர ஊரடங்கு அமல்ப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது..
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நாளை வாங்கி வைத்து கொள்ள அறிவுறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.. நடமாடு வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.. பால், மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளையும் மூட அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது..
Comments
Post a Comment