Posts

மரத்தடியில் இறைவன் காட்சியளிப்பது ஏன் ?

Image
ஆன்மீகம் தெரியுமா ?  அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா? மழை பெய்தாலும், நல்ல வெயில் அடித்தாலும் குடை தேவைப்படுகிறது. பனிக்காலத்தில் இளவெயிலாக இருக்கும். அப்போது குடை தேவையில்லை.   அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும்,   நாகராஜாவையும் அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்குகிறது என்பது இதன் ரகசியம். பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும்.  இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல!   வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். அப்போது அவர்கள் மழை, வெயிலில் இருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவார்கள்.   பனிக்காலத்தில் இளவெயில் பட்டால்தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். இப்படி, சீதோஷ்ண நிலையால் மனிதன் கஷ்டப்பட்டு விடக்கூடாது

ருத்ராட்சம் அணியலாமா ?

Image
ஆன்மீகம் தெரியுமா ?  ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின. வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன. ருத்திராட்சத்தை மனிதர்கள் அனைவரும் அணியலாம். ஆனால் இதனை அணிந்தவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தீட்டு இடங்களுக்கோ, இல்லத்திற்கோ செல்லக்கூடாது. தீட்டு ஆனவர் கைகளால் உணவு அருந்தக் கூடாது. அப்படி ஏதேனும் அறியாமல் நடந்து விட்டால் ருத்ராட்சத்தை தூய்மை செய்து பின்பு அணிந்தால் நன்மை தரும். மேலும், பெண்கள் ருத்திராட்சம் அணிந்திருந்தால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து விட்டு காலை எழுந்து குளித்து விட்டு அணிய வேண்டும், மாதவிடாய் காலங்களில் இதனை கண்டிப்பாக தொடுதல் கூடாது. குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்தால் ஜீரணம் சரியாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ச

சிவனுக்கு பிரியமான ஸ்லோகம்

Image
சிவனுக்கு பிரியமான இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பிரதோஷ தினங்களில் சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம். பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை படித்து வரலாம். இந்த ஸ்லோகம் படிக்கும் போது அசைவம் சாப்பிடாமல் இருத்தல் நலம்.

எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்?

Image
எந்த ஒரு வேலை செய்யும் போதும் அதற்கான காரண காரியத்தை தெரிந்து செய்தால், அதிக பலன் கிடைக்கும். தெய்வத் திருத்தலங்களில் இருக்கும் மரங்களை சுற்றுவது நன்மை பயக்கும் என்பது நமக்கு தெரிந்த செய்தி. ஆனால் எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். அரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும், வேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும், மாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும், விடதாழை மரம் - சனி தோஷம் போக்கும், பின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும், ஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும், பாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும், பும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும், அரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும், குறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும், கொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும், ஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும், கருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும், நத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,

உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்

Image
ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்: 1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். 2. பரணி: நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். 3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். 4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். 5. மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம். 6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர். 7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம். 8. பூசம்: பிறரை மதிப்ப

இறைத்தொண்டு செய்பவர்களுக்கு கர்வம் வரலாமா?

Image
கயிலாயத்தில் ஒரு நாள் நந்தி பகவானுக்கு தன் மீதும் தன் சிவ பக்தியின் மீதும் அதிக கர்வம் ஏற்பட்டது. உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானுக்கு இது தெரியாதா என்ன. நந்தியின் கர்வத்தை அடக்க நினைத்த ஈசனும், நந்தியின் மேல் அமர்ந்தபடி ஒரு முறை பூமியை வலம் வந்தார்.  அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனையே நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. நந்தியின் கர்வத்தை அடக்கும் நேரமும் வந்தது. இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார். அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஏனென்றால் இறைவன் அப்போது நந்தியுடன் இருந்தார். ஆனால் ஆணவம் உண்டாகி, இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியின் பாரம் கூட தாங்க முடியவில்லை. தனது வல்லமை

பத்து ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ...

Image
பிரம்ம கமலம் என்பது பத்து ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ.. இது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாரியப்பன் என்பவரது வீட்டில் இரவு பூத்துள்ளது.இது பகலில் வாடிவிடும்.இரவில் மட்டுமே பூக்கும் பூ.இது ஒரு இரவு மட்டும் பூக்கக்ககூடியது.