ஃபேஸ்புக், ட்விட்டர் என அங்கு பார்த்தாலும் Sarahah என வண்ணமயமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது ஒரு ஸ்டேடஸ் செயலி. வலைதளங்களில் நம்முடன் இணைந்துள்ள மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவரது முகம் தெரியாமல் அறிந்துகொள்ள வழிவகை செய்கிறது இந்த செயலி. எளிமையாக சொன்னால் இது ஒரு ஆண்-லைன் மொட்டை கடுதாசி சிஸ்டம் பாஸ். எப்படி செயல்படுகிறது ? ஆழ்மனதில் தேங்கியுள்ள வக்கிரங்களுக்கு சுதந்திரம் கொடுத்து மனசை துடைத்து தூர் வாரும் இந்த செயலி, ஆண்ட்ராய்ட் மட்டுமின்றி IOS இயங்குதளத்திலும் கிடைக்கிறது. அந்த செயலியில் உங்களது கணக்கை துவங்கி, உங்களுக்கான URL முகவரியை ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் ட்வீட்டி விட்டால் போதும், உங்களது முகமறியாத நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்த செயலிக்குள் இருக்கும் Inboxக்கு அனுப்பி வைப்பார்கள். இன்னும் விசேசம் என்னவென்றால், உங்களது முகவரிக்கு யார் வேண்டுமானாலும் லாக்-இன் செய்யாமலேயே கருத்து தெரிவிக்கலாம், பாராட்டலாம், விமர்சிக்கலாம், நாக்கை பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு கேள்வி கேட்கலாம், கழுவியும் ஊற்றலாம். இப்படி உங்களிடம் தெரிவி...