மகாபாரத காலத்துடன் தொடர்புடைய இந்த கிராமத்திற்கு சென்றால் வறுமை நீங்குமாம்.. எங்குள்ளது தெரியுமா?

சரஸ்வதி நதிக்கு சாபம் விட்ட விநாயகர், சிவபெருமானின் ஆசி பெற்ற இடம் என இந்தியாவிலேயே மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் ஒரு கிராமத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். மகாபாரத காலத்துடன் தொடர்புடைய இந்த கிராமத்திற்கு சென்றால் வறுமை நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.



இந்தியாவில் உள்ள பல கிராமங்கள், பல்வேறு புராண ரகசியங்களுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன.

அப்படிப்பட்ட ஒரு கிராமத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். உத்தரக்காண்டில் உள்ள இந்த கிராமம் 'இந்தியாவின் கடைசி கிராம்' அல்லது 'உத்தரகாண்டின் கடைசி கிராமம்' என்று அழைக்கப்படுகிறது.


இந்தியாவின் புனித இடங்களில் ஒன்றாக கருதப்படும் பத்ரிநாத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. மகாபாரத காலத்தோடு தொடர்புகொண்ட இந்த கிராமத்திற்கு விநாயகருடனும் தொடர்பு உள்ளது. பாண்டவர்கள் இந்த கிராமத்தின் வழியாக தான் சொர்க்கத்திற்கு சென்றதாகவும் நம்பப்படுகிறது.


சுமார் 19,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் 'மனா'. முன்பொரு காலத்தில் மணிபத்ர தேவ் என்ற பெயரில் இது அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மனா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. புராணக்கதைகளின் நம்பிக்கைப்படி, இந்தியாவிலேயே இந்த கிராமம் மட்டும் தான் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. மேலும் சாபம் மற்றும் பாவம் இல்லாத கிராமம் என்றும் மக்கள் இதனை நம்புகின்றனர்.

இந்த கிராமத்திற்கு வரும் ஒவ்வொருவரின் வறுமையும் நீங்கும் என்ற நம்பிக்கையும் இங்கு உள்ளது. ஆம்.. சிவபெருமானின் சிறப்பு ஆசீர்வாதம் இந்த கிராமத்திற்கு கிடைத்திருப்பதால், இங்கு வரும் மக்களின் வறுமை ஒழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. மகாபாரதக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பாலம் இன்றும் இங்கு உள்ளது. 'பீமன் பாலம்' என்றழைக்கப்படும் இந்த பாலத்தின் வழியாக தான் பஞ்ச பாண்டவர்கள் சொர்க்கத்திற்கு சென்றார்காளாம்..

அப்படி அவர்கள் செல்லும் போது அங்கு பாயும் சரஸ்வதி நதியை கடக்க வழி தேடினார்களாம்.. ஆனால் சரஸ்வதி தேவியோ அவர்கள் செல்வதற்கு வழிக்கொடுக்க மறுத்துவிட்டதாம். அதன்பின்னர், பீமன் இரண்டு பெரிய பாறைகளை ஆற்றின் மீது வைத்து வழியை உண்டாக்க, அந்த பாலத்தின் மீது ஏறி தான் பாண்டவர்கள் சொர்க்கத்திற்கு சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது.


விநாயகருக்கும் இந்த கிராமத்திற்கும் கூட ஒரு தொடர்புள்ளது. வியாச முனிவரின் உத்தரவின் பேரில் விநாயகர் இந்த கிராமத்தில் அமர்ந்து தான், மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருந்தாராம். அப்போது இங்கு ஓடும் சரஸ்வதி நதியின் அதீத சத்தம் விநாயகரின் காதில் விழவே, சத்தத்தை குறைக்கும் படி, அவர் சரஸ்வதியிடம் கூறினாராம்.. எனினும் சரஸ்வதி நதியின் சத்தம் குறையாததால், கோபமடைந்த விநாயகர், இதனை தாண்டி யாரும் உங்களை (நதியை) பார்க்க முடியாது என்று சாபம் விட்டாராம்..

வியாச முனிவர் வாழ்ந்த குகையும் இந்த கிராமத்தில் உள்ளது. இங்கு தான் வியாசர் பல வேதங்களையும், புராணங்களையும் இயற்றினார். வியாச குகையின் மேற்தோற்றத்தை பார்த்தால், பல்வேறு புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியது போல இருக்கும். இதன் காரணமாக இந்த குகை 'வியாச போதி' என்றும் அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்