புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா என பெயர்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் 'கொரோனா' என பெயர் சூட்டியுள்ளனர்.

லக்னோ

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, வீட்டிற்குள்ளயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸானது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 275 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோரக்பூர் நகரை சேர்ந்த ஒரு தம்பதி, புதிதாக பிறந்த தங்களுடைய மகளுக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸை சமாளிக்கும் முதல் முயற்சியாக இந்திய பிரதமர் நரேந்திய மோடி அறிவித்த, 'ஜனதா ஊரடங்கு உத்தரவு' நாளான ஞாயிற்றுக்கிழமையன்று குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையின் மாமா, நிதிஷ் திரிபாதி குழந்தைக்கு கொரோனா என பெயர் சூட்ட முடிவெடுத்ததாக கூறியுள்ளார். 

இதுகுறித்து கூறிய அவர், "வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை, இது உலகில் பல மக்களைக் கொன்றது.ஆனால் இது நம்மில் பல நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டு உலகை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. இந்த குழந்தை தீமைக்கு எதிராக போராடுவதற்கான மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும்," என கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி