நிவாரண உதவித்தொகை ரூ.1,000 வழங்க விடுமுறை நாளான ஏப்ரல் 3-ந்தேதி ரேஷன்கடை இயங்கும் - தமிழக அரசு உத்தரவு
நிவாரண உதவித்தொகை ரூ.1,000 வழங்க விடுமுறை நாளான ஏப்ரல் 3-ந்தேதி ரேஷன்கடை இயங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்றை தடுக்க அரசால் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவித்தொகை ஆகியவை ரேஷன் கடைகளில் ஏப்ரல் 2-ந் தேதியில் இருந்து வினியோகிக்கப்பட வேண்டும்.
இதற்காக வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். ஏப்ரல் 3-ந் தேதியன்று ரேஷன் கடை பணியாளர்கள் பணி செய்த நாளுக் கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும். ரேஷன் கடைகள் செயல்பட ஏதுவாக கடை பணியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment