வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை என கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறி உள்ளார்.

புதுடெல்லி

இன்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:-  

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்.  பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.  சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 

ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைக்கப்படுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.ரிசர்வ் வங்கி தீவிரமாக களத்தில் உள்ளது.சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்

எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கும்3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு

 

கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க உத்தரவு; இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது  என கூறினார்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி