பிற வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க கட்டணம் கிடையாது - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பிற வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க கட்டணம் கிடையாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொ ரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாடு முழுவதும் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. நடப்பு நிலவரங்களை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

பொருளாதார நிதி தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆக குறைக்கப்படுகிறது. 

ரூ.5 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.  ஜூன் 30ஆம் தேதி வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும். 

பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, சுங்கவரி போன்ற பல்வேறு கணக்குகளை தாக்கல் செய்ய தொழிற்துறைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.  

அடுத்த 3 மாதங்களுக்கு பிற வங்கியின் ஏடிஎம்- ல் இருந்து டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்தாலும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது. 

அடுத்த 3 மாதங்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை.  நாட்டில் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி