உங்கள் சமையல் ருசிக்கவில்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க
எத்தனை சமையல் நிகழ்ச்சி பார்த்து சமையல் செய்தாலும் சமையல் ருசியாக இல்லை என்று கவலை வேண்டாம் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க ருசி தூள் கிளப்பும்
1)வெண்பொங்கல், பொங்கல் என்ன செய்தாலும் சூடாக இருக்கும் போதும் நெய் ஊற்றினால் கிரகித்து கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் சிறிது நேரம் ஆறியவுடன் நெய் கொஞ்சம் ஊற்றினால் கூட தாராளமாக ஊற்றியது போல் இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்.
2)முற்றாத பாகற்காயை துண்டுகளாக நறுக்கி எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு டப்பாவில் போட்டு 15 நாள்கள் ஊற விடுங்கள்.பின்னர் அதை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம் கசப்பு இருக்காது.
3)குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் ஊற்றி காய்கறிகள் மற்றும் பழங்களை போட்டு 5 நிமிடம் வைத்தால் போதும் அதிலுள்ள கிரும்பிகள் அழிந்து விடும். பின்னர் எடுத்து துடைத்து விட்டு பயன்படுத்தலாம்.
4)சப்பாத்தி, பூரி போன்றவை இரவில் சாப்பிட்டால் சரியாக ஜீரணம் ஆகாமல் இருக்கும் அப்போது தயிரில் சீனி கலந்து சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும்.
5)சமையலில் உப்பு, காரம் கூடினால் ஒரு உருளைக்கிழங்கை போட்டால் சரி ஆகும்.
இந்த டிப்ஸ் எல்லாம் சமையல் பண்ணும் போது use பண்ணி பாருங்க உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
Comments
Post a Comment