இந்த டிப்ஸ் வச்சு உங்கள் சமையல் அறையை ரொம்ப சுத்தமாக வைத்து கொள்ளலாம்.


சமையல் முடிந்தவுடன் சமையல் அறையை சுத்தபடுத்தி விட வேண்டும். சமையல் அறை சுத்தமாக இருந்தால் தான் நமக்கு ஆரோக்கியம். இந்த டிப்ஸ் use பண்ணி உங்க நேரத்தை வீணாக்காமல் சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்ளலாம்.

1) காய்கறிகளை போர்டில் வைத்து நறுக்கும் போது அதன் தோல் மற்றும் வேஸ்ட்டனா பகுதி அந்த போர்டு சுத்தி சிந்தி இருக்கும். இதனால் தரை அழுக்காக ஆகிவிடும். இதை தவிர்க்க போர்டின் ஒரு பக்கத்தில் ஒரு கவரை வைத்து விட்டால் போதும் நறுக்கும் காய்கறியின் தோல் பகுதியை அப்படியே அதனுள் தள்ளிவிடலாம்.



2) பாத்திரத்தை sink யில் வைத்து கழுவி பாத்திரம் வைக்கும் கூடையில் வைப்பது வழக்கம்.அவ்வாறு வைக்கும் போது தண்ணீர் வடிந்து ஈரமாக ஆகி விடும். இதை தடுக்க ஒரு கனமான துணியை விரித்து அதன் மீது கூடையை வைத்து பாத்திரம் கழுவினால் தண்ணீர் டைல்ஸ் மீது வடியாது. சுத்தமாக இருக்கும்.



3)குக்கரில் பிரியாணி சமைத்து முடித்தவுடன் அதை கழுவுவது ரொம்ப கடினமாக இருக்கும். அதனால் அந்த கறை மீது சிறிது பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வைத்தால் போதும் 5 நிமிடம் கழித்து கழுவினால் ஈஸியாக கறை எல்லாம் போய்விடும்.



4)பால் பொங்கி வழிந்தால் இடத்தை நாசம் செய்து விடும். அடுப்பையும் சுத்த படுத்த வேண்டும். இதனை தவிர்க்க பால் பாத்திரத்தின் மீது ஒரு மரக்கரண்டியை குறுக்காக வைத்தால் போதும் பால் பொங்கி வழியாது.



நம் முன்னோர்கள்

5) குக்கரில் பருப்பை வேக வைக்கும் போது பருப்பு பொங்கி சிதறி வீணாகும். இதை தவிர்க்க பருப்புடன் ஒரு ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு பொங்கி வழியாது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி