எந்த நோய்க்கு என்ன ஜூஸ் குடிக்க வேண்டும்!


ரத்தச்சோகை இருந்தால் பீட்ரூட், பசலைக்கீரை, ஆப்பிள், கேரட், எலுமிச்சை, உலர்ந்த திராட்சை, முளைகட்டிய பயறு போன்றவற்றில் எதையாவது தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. வாதக் கோளாறுகளுக்கு அன்னாசி, பப்பாளி, பாகற்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, வேப்பம்பூ போன்றவற்றில் எதையாவது தனியாக ஜூஸ் செய்து குடிக்கலாம். 



அமிலம் அதிகமாக இருந்து நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு இருந்தால் வெள்ளரி, ஆப்பிள், தர்பூசணி, பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், தர்பூசணி, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, பசலைக்கீரைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம். முகப்பரு தொல்லைக்கு வெள்ளரி,பப்பாளி, எலுமிச்சை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் பழங்களின் செய்த ஜூஸ் நல்லது. 



ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, ஆப்பிள், கேரட், வெங்காயம் போன்றவற்றின் ஜூஸ் குடிக்கலாம். உடல்பருமன் உள்ளவர்கள் தக்காளி, கேரட், வெண்பூசணி, சுரைக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றின் ஜூஸ்களை அருந்துவது நல்லது. 



மெனோபாஸ் காலங்களில் கேரட், பீட்ரூட், வெள்ளரி, மாதுளை, அத்தி, பேரீச்சை போன்ற பழங்களின் ஜூஸ்களை அருந்தலாம். உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள், நச்சுகளை வெளியேற்ற கோதுமைப்புல், அறுகம்புல், கேரட், பீட்ரூட் மற்றும் எல்லா பச்சைநிற காய்கறிகள் ஜூஸ்களை குடிக்கலாம். தசைப்பிடிப்பு விலக செலரி, தண்டுக்கீரை ஜூஸ், இளநீர் குடிக்கலாம்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்