இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் நகரம் எது தெரியுமா?


பெங்களூரு:

ந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து 2வது இடத்தை மும்பையும், 3வது இடத்தை தலைநகர் டில்லியும் பிடித்து உள்ளது.



இது தொடர்பாக லிங்க்ட்இன் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரிய வந்ததுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக, ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.14.7 லட்சம், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையில் பணிபுரிபவர்கள் ரூ.12 லட்சமும், நுகர்வோர் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.9 லட்சமும் சம்பளம் பெறுகின்றனர்.

பெங்களூருவையடுத்து 9 லட்ச ரூபாய் வருமானம் தரும் மும்பை நகரம் 2ம் இடத்திலும், 8.9 லட்ச ரூபாய் சராசரி வருமானத்துடன் டில்லி-NCR 3ம் இடத்திலும், 8.4 லட்ச ரூபாய் வருமானம் தரும் ஹைதெராபாத் 4ம் இடத்திலும் உள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை இப்பட்டியலில் 5ம் இடம் வகிக்கிறது. இங்கு நபர் ஒருவருக்கு சராசரி வருமானம் 6.3 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி