Posts

Showing posts from November, 2018

இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் நகரம் எது தெரியுமா?

Image
பெங்களூரு: இ ந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து 2வது இடத்தை மும்பையும், 3வது இடத்தை தலைநகர் டில்லியும் பிடித்து உள்ளது. இது தொடர்பாக லிங்க்ட்இன் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரிய வந்ததுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக, ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.14.7 லட்சம், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையில் பணிபுரிபவர்கள் ரூ.12 லட்சமும், நுகர்வோர் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.9 லட்சமும் சம்பளம் பெறுகின்றனர். பெங்களூருவையடுத்து 9 லட்ச ரூபாய் வருமானம் தரும் மும்பை நகரம் 2ம் இடத்திலும், 8.9 லட்ச ரூபாய் சராசரி வருமானத்துடன் டில்லி-NCR 3ம் இடத்திலும், 8.4 லட்ச ரூபாய் வருமானம் தரும் ஹைதெராபாத் 4ம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை இப்பட்டியலில் 5ம் இடம் வகிக்கிறது. இங்கு நபர் ஒருவருக்கு சராசரி வருமானம் 6.3 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம், நாம் அறிந்திடாத பின்னணி...

Image
கார்த்திகை தீபம் ,  தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது. தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே. அனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து. தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள் ் பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்ம

16 வகை தீபங்கள்

Image
தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு. தீபத்திற்கான எண்ணெய் எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தாலம். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது.  இல்லத்தில் இறை வனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.

திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்

Image
திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்... முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும். இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும். மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும். நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும். ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும். ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

உங்கள் உடல் எடை எந்த அளவுக்கு இருந்தால் எத்தனை லிட்டர் குடிக்க வேண்டும்.

Image
உணவு சாப்பிடாமல் கூட வாரக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் ஒரு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் நீர்வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகள் செயல்படும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும்.  45 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 50 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 55 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 60 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 65 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 70 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 75 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 80 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

எந்த நோய்க்கு என்ன ஜூஸ் குடிக்க வேண்டும்!

Image
ரத்தச்சோகை இருந்தால் பீட்ரூட், பசலைக்கீரை, ஆப்பிள், கேரட், எலுமிச்சை, உலர்ந்த திராட்சை, முளைகட்டிய பயறு போன்றவற்றில் எதையாவது தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. வாதக் கோளாறுகளுக்கு அன்னாசி, பப்பாளி, பாகற்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, வேப்பம்பூ போன்றவற்றில் எதையாவது தனியாக ஜூஸ் செய்து குடிக்கலாம்.  அமிலம் அதிகமாக இருந்து நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு இருந்தால் வெள்ளரி, ஆப்பிள், தர்பூசணி, பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், தர்பூசணி, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, பசலைக்கீரைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம். முகப்பரு தொல்லைக்கு வெள்ளரி,பப்பாளி, எலுமிச்சை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் பழங்களின் செய்த ஜூஸ் நல்லது.  ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, ஆப்பிள், கேரட், வெங்காயம் போன்றவற்றின் ஜூஸ் குடிக்கலாம். உடல்பருமன் உள்ளவர்கள் தக்காளி, கேரட், வெண்பூசணி, சுரைக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றின் ஜூஸ்களை அருந்துவது நல்லது.  மெனோபாஸ

உங்கள் சமையல் ருசிக்கவில்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

Image
எத்தனை சமையல் நிகழ்ச்சி பார்த்து சமையல் செய்தாலும் சமையல் ருசியாக இல்லை என்று கவலை வேண்டாம் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க ருசி தூள் கிளப்பும் 1)வெண்பொங்கல், பொங்கல் என்ன செய்தாலும் சூடாக இருக்கும் போதும் நெய் ஊற்றினால் கிரகித்து கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் சிறிது நேரம் ஆறியவுடன் நெய் கொஞ்சம் ஊற்றினால் கூட தாராளமாக ஊற்றியது போல் இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும். 2)முற்றாத பாகற்காயை துண்டுகளாக நறுக்கி எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு டப்பாவில் போட்டு 15 நாள்கள் ஊற விடுங்கள்.பின்னர் அதை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம் கசப்பு இருக்காது. 3)குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் ஊற்றி காய்கறிகள் மற்றும் பழங்களை போட்டு 5 நிமிடம் வைத்தால் போதும் அதிலுள்ள கிரும்பிகள் அழிந்து விடும். பின்னர் எடுத்து துடைத்து விட்டு பயன்படுத்தலாம். 4)சப்பாத்தி, பூரி போன்றவை இரவில் சாப்பிட்டால் சரியாக ஜீரணம் ஆகாமல் இருக்கும் அப்போது தயிரில் சீனி கலந்து சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். 5)சமையலில் உப்பு, காரம் கூடினால் ஒரு உருளைக்கிழங்கை போட்டால் சரி ஆகும். இந்த டிப்ஸ் எல்லாம் சமையல் பண்ணும் போது use

இந்த டிப்ஸ் வச்சு உங்கள் சமையல் அறையை ரொம்ப சுத்தமாக வைத்து கொள்ளலாம்.

Image
சமையல் முடிந்தவுடன் சமையல் அறையை சுத்தபடுத்தி விட வேண்டும். சமையல் அறை சுத்தமாக இருந்தால் தான் நமக்கு ஆரோக்கியம். இந்த டிப்ஸ் use பண்ணி உங்க நேரத்தை வீணாக்காமல் சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்ளலாம். 1) காய்கறிகளை போர்டில் வைத்து நறுக்கும் போது அதன் தோல் மற்றும் வேஸ்ட்டனா பகுதி அந்த போர்டு சுத்தி சிந்தி இருக்கும். இதனால் தரை அழுக்காக ஆகிவிடும். இதை தவிர்க்க போர்டின் ஒரு பக்கத்தில் ஒரு கவரை வைத்து விட்டால் போதும் நறுக்கும் காய்கறியின் தோல் பகுதியை அப்படியே அதனுள் தள்ளிவிடலாம். 2) பாத்திரத்தை sink யில் வைத்து கழுவி பாத்திரம் வைக்கும் கூடையில் வைப்பது வழக்கம்.அவ்வாறு வைக்கும் போது தண்ணீர் வடிந்து ஈரமாக ஆகி விடும். இதை தடுக்க ஒரு கனமான துணியை விரித்து அதன் மீது கூடையை வைத்து பாத்திரம் கழுவினால் தண்ணீர் டைல்ஸ் மீது வடியாது. சுத்தமாக இருக்கும். 3)குக்கரில் பிரியாணி சமைத்து முடித்தவுடன் அதை கழுவுவது ரொம்ப கடினமாக இருக்கும். அதனால் அந்த கறை மீது சிறிது பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வைத்தால் போதும் 5 நிமிடம் கழித்து கழுவினால் ஈஸியாக கறை எல்லாம் போய்விடும். 4)பால் ப

தீபாவளி சார்ந்த நம்பிக்கைகள்

Image
இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாட்ட மகிழ்ச்சியை தரும் என்பதுடன் நமது வாழ்வின் வளங்கள் பன்மடங்கு பெருகுவதற்கும், ஆரோக்கியத்தை பெறுவதற்குமான முயற்சிகள்தான். சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பது பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களால் தான் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இறை நம்பிக்கை என்பதுடன், தொடர்ந்து வாழ்வை நகர்த்த மேம்பட்ட முயற்சியாகவும்தான் கொள்ள வேண்டும்.  அது போல் தீபாவளி பண்டிகை சமயத்திலும் சில சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி சமயத்தில் செய்யப்படும் இந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது ஓம் வரைவது, சங்கு ஒலிக்க செய்வது, விநாயகர் - லட்சுமி மந்திரங்கள், கரும்பு வேர் வணங்குவது, தாமரை மலரால் பூஜை செய்வது போன்றவாறு உள்ளன. இவற்றை தீபாவளி சமயத்தில் செய்யும் போது நமது வறுமை நிலை ஒழிந்து செல்வ நிலை மேம்பாடு அடையும் என்பதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக தீபாவளி பூஜையோடு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை ம

தீபாவளியின் சிறப்புகள்

Image
கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன அவை: 1. ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள். 2. மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள். 3. புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள். 4. சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம். 5. குருகோவிந்த்சிங் சீக்கியமத அமைப்பான 'கல்சா'வை அமைத்த தினம். 6. சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்டநாள். 7. நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள். 8. கோவர்த்தன பூஜை செய்யும் நாள். 9. மாவலிபூஜை செய்யும் நாள். 10. வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள். 11. ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள். (ராமாயண காலத்திற்கு பிறகுதான் தீபாவளி வந்தது. ஆனால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள். ஐப்பசி மாதம் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை, சுக்கிலபட்ச பிரதமை நாள்) 12. தீபாவளி தினத்தை அரசு விடுமுறை என அறிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடும்படி செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் என அவர் எழுதிய 'அயினி அக்பர்' என்ற நூல

தீபாவளியன்று வீடுகளில் தீபம் ஏற்றுவது ஏன்?

Image
நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள்.  அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவாக இருந்த ஜோதிலட்சுமியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிபோனார்கள் அசுரர்கள்.  திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றிவைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.