Posts

பல் சொத்தையாகாமல் தடுக்க சூப்பரான வழி முறைகள்!

Image
நம் பற்கள் சொத்தையாவதைத் தடுக்க தினமும் 2 முறை பல் துலக்குவதுடன் மெல்லிய குச்சிகளைக் கொண்ட பிரஷ்ஷை மட்டும் உபயோகிக்க வேண்டும். மேலும் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். Fluoride நிறைந்த பற்பசைகளையே பயன்படுத்த வேண்டும். தினமும் உணவு உண்ட பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். சர்க்கரை நிறைந்த இனிப்புகள், சாக்லேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அவசியம் நிறுத்த வேண்டும். வெண்ணெய், திராட்சை போன்ற பற்களின் நலனிற்கு உகந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.இதை பின்பற்றினால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.உங்கள் பற்களையும் பாதுகாக்க முடியும். 

குடும்ப சண்டையையும் பண விரயத்தையும் தடுக்கணுமா..? அப்ப இதெல்லாம் உங்க வீட்டில் இருக்கக்கூடாது..

Image
மக்கள் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களைச் செய்கிறார்கள். சிலர் தங்கள் வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல வகையான படங்களையும் வைக்கின்றனர். ஆனால் படங்களை வைத்திருக்கும்போது வாஸ்து மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவை இயற்கையில் எதிர்மறையான / நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்த படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அவற்றை உடனடியாக வீட்டை விட்டு அகற்றி விட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்வது போலவோ நீரூற்று புகைப்படங்கள் இருந்தால், அதை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். தண்ணீர் பாயும் அதே வழியில், பணமும் வீட்டை விட்டு வெளியேறுகிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து படி, எந்த மூழ்கும் படகு அல்லது படகு படங்கள் வீட்டில் இருக்கக்கூடாது. வீட்டில் வெளியிடப்பட்ட இத்தகைய படங்கள் வீட்டின் உறுப்பினர்களை எதிர்மறையாக பாதிக்கின்றன. வீட்டில் காணப்படும் இதுபோன்ற படங்கள் அதிர்ஷ்டம் தொடர்பான தடைகளை உருவாக்குகின்றன என்று நம்பப்படுகிறது. மகாபாரதப் போர் தொடர்பான படமும் வீட்டில் நிறுவப்பட்டிருந்தால், அதுவும் தாமதமின்றி...

ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்..

Image
ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை .. இந்தத் தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்.. இது முற்றிலும் கட்டுக் கதையோ மூட நம்பிக்கையோ கிடையாது. நம் முன்னோர்கள் எதைக் கூறினாலும் அதில் பெரும் அர்த்தம் புதைந்திருக்கும். எனவே அதை அலட்சியப்படுத்தாமல் கடைப்பிடித்து வாழ்வில் நலம் பெறுவோம். அவ்வரிசையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயம் செய்யக் கூடாத சில வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ஆண்கள் செய்யக்கூடாத தவறுகள்: 1. தாய் தந்தையர் உள்ள ஆண்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை அன்று சவரம் செய்யக்கூடாது. 2. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின கதவின் மேல் போடக்கூடாது . 3. நம் தலையில் உடம்பிலிருந்து உதிர்ந்த முடிகளையும் நகங்களையும் வீட்டில் வைக்கக்கூடாது உடனே அப்புறப்படுத்த வேண்டும். 4. இரண்டு கைகளையும் வைத்து ஒரே சமயத்தில் தலையை சொறியக்கூடாது. 5. திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுக்கு சென்று வந்த பின்பு நீராடுவது கூடாது. 6. எவ்வேளையிலும் இருகைகளையும் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமரக்கூடாது. 7. ஈரத் துணிகளை உடுத்திக்கொண்டு உணவு உண்ணக்கூடாது. 8. கோவிலில் கடவுளை வணங்கும் பொழுது முன்பக்கம் உள்...

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

Image
கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும். முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும். சிறுகீரை: நீர்கோவை குணமாகும். வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும் புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

Image
1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும். 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்  அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள். 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.  ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும். 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.  அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்...

ஆன்மீகத்தில் 108 என்பது வெறும் எண் மாத்திரம் அல்ல! அதன் சூட்சுமம் என்ன?

Image
எண்களுக்கென்று தனி முக்கியத்துவம் உண்டு. இந்த பிரபஞ்சமே எண்களின் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் நல்லது கெட்டது என அனைத்தையும் வெளிக்கொணர கணிதம் அவசியமாகிறது. எண்களை வெறும் கணித உருக்கள் என்றளவில் புறந்தள்ளிவிட முடியாது. அவை நம் உலகின் இயக்கத்தோடு தொடர்புடையவை. ஒரு மனிதனின் வாழ்வோடு தொடர்புடையவை. அந்த வகையில் ஒவ்வொரு எண்ணிற்கென்று ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு எண்ணிற்கென்று குணாதிசயங்கள் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதியான பிரசன்னம் பார்ப்பதில் எண்ணின் பங்க் அலாதியானது. அந்த வகையில் நம் இந்து மரபில் நாம் அதிகம் கேள்வியுறும் ஒர் எண் நூற்றியெட்டு. நூற்றியெட்டு என்பது புனித எண்ணாகவே கருதப்படுகிறது. பரிகாரங்களில் நூற்றியெட்டு முறை கோவிலை வலம் வருதல், நூற்றியெட்டு தேங்காய் உடைப்பது என எந்த வொரு பரிகாரத்தையும் நூற்றியெட்டு முறை செய்கிற போது அதன் பண்பும், அது கொடுக்கும் பலன்களும் நன்மையாக மாறிவிடுகின்றன. மேலும், நூற்றியெட்டு திவ்யதேசங்கள், ஜப மாலை, ருத்ராக்‌ஷம் போன்ற புனித பொருட்கள் நூற்றியெட்டு என்ற முறையிலேயே வடிவமைக்கப்படுகிறது. சக்தி...

நம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன...?? தமிழர்களின் உணவில் அறிவியல்... முழு விவரம் உள்ளே...

Image
கிடைத்ததை சாப்பிடும் வழக்கம் மற்றும் சுவைக்காக மட்டுமே உண்ணக்கூடிய வகையில் அமைக்கப்பட்டது இல்லை நம் தமிழ் பண்பாட்டு உணவு முறை. முதலில் எதை உண்ண வேண்டும்? இறுதியில் எதை உண்ண வேண்டும்? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்று ஆராய்ந்து அதற்கேற்ப உணவு முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி, தேரையர் சித்தர் எழுதிய, "பதார்த்த குண சிந்தாமணி" என்ற நூலில் நாம் குடிக்கும் தண்ணீரிலிருந்து, பால், தயிர், பருப்பு, அரிசி, தானியங்கள் என ஒவ்வொன்றிற்கும் என்னென்ன உணவு? ஒவ்வொன்றிலும் எத்தனை வகை உள்ளது? என்று வகுத்து கூறியிருக்கிறார்கள். நம், அனைவருக்கும் சாப்பிட்டு முடித்தவுடன் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு? என்று நமக்கு தெரிவதில்லை. நாம் உணவு  உட்கொள்ளும் போது, இனிப்பை, எப்போது சாப்பிட வேண்டும்? என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையின் 25-வது பாடலில், புலவர் பெருவாயின் முள்ளியார் கூறியிருக்கிறார். தமிழர்களின் உணவு சூட்சமம், வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்றை அடிப்படையாகக் கொண்டது. இந...