ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்..


ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை .. இந்தத் தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்..

இது முற்றிலும் கட்டுக் கதையோ மூட நம்பிக்கையோ கிடையாது. நம் முன்னோர்கள் எதைக் கூறினாலும் அதில் பெரும் அர்த்தம் புதைந்திருக்கும். எனவே அதை அலட்சியப்படுத்தாமல் கடைப்பிடித்து வாழ்வில் நலம் பெறுவோம். அவ்வரிசையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயம் செய்யக் கூடாத சில வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஆண்கள் செய்யக்கூடாத தவறுகள்:

1. தாய் தந்தையர் உள்ள ஆண்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை அன்று சவரம் செய்யக்கூடாது.

2. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின கதவின் மேல் போடக்கூடாது .

3. நம் தலையில் உடம்பிலிருந்து உதிர்ந்த முடிகளையும் நகங்களையும் வீட்டில் வைக்கக்கூடாது உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

4. இரண்டு கைகளையும் வைத்து ஒரே சமயத்தில் தலையை சொறியக்கூடாது.

5. திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுக்கு சென்று வந்த பின்பு நீராடுவது கூடாது.

6. எவ்வேளையிலும் இருகைகளையும் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமரக்கூடாது.

7. ஈரத் துணிகளை உடுத்திக்கொண்டு உணவு உண்ணக்கூடாது.

8. கோவிலில் கடவுளை வணங்கும் பொழுது முன்பக்கம் உள்ள உடல் முழுவதும் தரையில் படும்படி அடுத்து வணங்க வேண்டும்.

பெண்கள் செய்யக்கூடாத தவறுகள்:

1. மஞ்சள் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிய வேண்டும்.

2. தலை குளிக்கும் பொழுது சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு சுமங்கலிப்பெண்கள் நீராடவண்டும்.

3. கடவுளை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் பின் வைத்து பின் சேர்த்து நெற்றி தரையில் படும்படி மண்டியிட்டு கும்பிட வேண்டும்.

4. கோவிலில் அங்கப்பிரதட்சணம் பெண்கள் செய்யக்கூடாது பெண்களின் மார்பு பகுதியில் தரையில் படக்கூடாது. அதேபோல் கோவிலில் பிரசாதமாக தரும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.

5. பெண்கள் கோலமிடும் பொழுது தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் விடக்கூடாது.

6. பெண்கள் சேலையின் முந்தானையை தொங்கவிட்டு நடக்கக் கூடாது.

7. திருமணமான பெண்கள் ஒரு விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும் ஒரே காலில் இரண்டு மூன்று பெட்டிகள் அணியக்கடாது .அது உடல் ,வருமானம் மற்றும் கணவனை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும்.

8. கர்ப்பமுற்ற பெண்கள் உக்கிர தேவதைகள் உள்ள கோவிலுக்கு செல்லக்கூடாது.

9. அம்மாவாசை கவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.

10. திருமணமான பெண்கள் கிழக்கு திசையை நோக்கி நின்று உச்சந்தலையிலும் இரு புருவத்தின் இடையிலும் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.திருமணமாகாதவர்கள் உச்சந்தலையில் இட்டு கொள்ளக் கூடாது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்