Posts

காவல் துறை அதிகாரிகளுக்கு நடுராத்திரியில் வெளியான அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Image
சென்னை மாநகர ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அதிரடி மாற்றம் செய்யப்ட்டுள்ளார். புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். சென்னை,மதுரை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 39 ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : 1. சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 2. செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 3. சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 4. மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 6. தலைமையிட ஐஜி ஜெயராம் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

‘இந்தியாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ்,

Image
மருத்துவம், பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகளைக் கடந்து இப்போது புதிய பாதிப்புகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலும், கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் மிகப்பெரிய அளவில் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை சரியாக மேலாண்மை செய்யாவிட்டால் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த மே 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கூட, குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களில் 86 விழுக்காட்டினர் யாருடைய உதவியையும் கோரவில்லை; 77% பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அவையும் கணக்கில் சேர்க்கப்பட்டால் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக அதிகரித்திருக்கும் என்பத

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Image
நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. விமான சேவை, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ரயில்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சில மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 12 ஆம் தேதி வரையிலான பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம

சபரிமலை கோவில் திருவிழா இந்த ஆண்டு ஒத்தி வைப்பு; கேரள அரசு முடிவு

Image
சபரிமலை கோவில் திருவிழாவை இந்த ஆண்டு ஒத்தி வைப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம் , நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதன் எதிரொலியாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.  எனினும், கோவில்களில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவின் தளர்வுகளில் ஒரு பகுதியாக, ஜூன் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.  இதனால், வருகிற 14ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில்  நிர்வாகம் தெரிவித்தது. தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர்

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Image
சென்னை இன்றுடன் 4-வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பை அறிவித்து உள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும்  அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி  ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய  அன

ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து - முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்

Image
ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன் பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், டிக்கெட் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் முன்பதிவு தொடங்கியது. ஆனால் ஏப்ரல் 14-ந் தேதி முதல் வழக்கமான அனைத்து ரெயில்களுக்கும் முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. தேவைக்கு ஏற்ப சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் ஷராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் வசதிக்காக கடந்த 12-ந் தேதி முதல் டெல்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, வழக்கமான ரெயில்களில் வருகிற ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்வதற்காக ஊரடங்குக்கு முன்பும், ஊரடங்கு காலத்திலும்