நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. விமான சேவை, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ரயில்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது சில மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 12 ஆம் தேதி வரையிலான பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்