சூரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் விழாவாக திருச்செந்தூரில் படு விமர்சையாக கொண்டாடப்படுவது தெரியும். ஆனால் அதன் பின்னால் இத்தனை விசயங்கள் இருப்பது தெரியுமா? மாங்கனியில் ஆரம்பித்த போட்டி, அண்ணன் தம்பிக்குள் தகராறாகி, கோபித்துக்கொண்ட முருகன் மலை மீது ஏறி நின்ற கதைகள் பல கேட்டிருப்போம். அப்படி பட்ட முருகப் பெருமானின் திருவிளையாடல்களில் பல சுவாரசியங்களும், இன்ப அதிர்ச்சிகளும் நிறைந்தது இந்த சூரசம்ஹாரம். இதையே பெரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர் மக்கள். அதுவும் திருச்செந்தூரில். சிக்கலில் வேல் வாங்கி வந்த முகம், செந்தூரில் சூரனை வதம் செய்த முகம் என்று முருகப் பெருமானின் பெருமைகளை பாடுவார்கள். இந்த சூரசம்ஹாரத்தின் வரலாறு பற்றியும், அதன் பின் இருக்கு சில சுவாரசியமான தகவல்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம். திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் இன்று மாலை சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடக்கவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திருச்செந்தூருக்கு படையெடுக்கிறார்கள். எப்படி செல்வது எது சிறந்த வழி என்பதையும், சூர சம்ஹார நிகழ்...