தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு...! மற்றும் மருத்துவம்!





டெங்கு காய்ச்சல்:

ஏடிஎஸ் வகை கொசு கடித்தால் மனிதர்களுக்கு இந்த தொற்று நோய் பரவுகிறது. இதை 'எலும்பு முறிவு காய்ச்சல்' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் வந்தால் கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இந்த நோய் மிகவும் தீவிரம் ஆகும் பட்சத்தில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் 'டெங்கு குருதிப் போக்கு காய்ச்சல்' ஏற்படும்.

இது உயிருக்கு ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும்.

ஒருவருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயை பரப்பும் கொசுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும். ஆனால் டெங்கு காய்ச்சல் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை.

டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு இருக்கும்பொழுது உடலில் நீர் சத்து மிகவும் குறைந்து காணப்படும்.

இந்த நீரின் அளவை சரிசெய்வதற்கு கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் வழங்கும் ஓஆர்எஸ் என்ற நீராகாரம் போதுமான அளவு கொடுத்து வர வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரி செய்யப்படும்.

டெங்கு கொசு வானது பகலில் மட்டுமே கடிக்கக்கூடியது.

இந்த டெங்கு கொசு உருவாகக்கூடிய தேவையற்ற பொருட்களை நாம் உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

பகலில் கொசு வலைக்குள் குழந்தைகளை தூங்க வைப்பது மிகவும் சிறந்தது.

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து வைக்கவேண்டும்.

இந்த டெங்கு காய்ச்சலை குணப்படுத்திய உடன் அலட்சியமாக இல்லாமல், காய்ச்சல் குறைந்து அடுத்த மூன்று நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்காமலும், மிகவும் சோர்ந்த நிலையில் காணப்பட்டால் மீண்டும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

டெங்கு காய்ச்சலை குணமாக்குவதற்கு சித்த மருத்துவம் பரிந்துரைக்கப்படுகிறது.

சித்த மருத்துவம்:

1.நிலவேம்பு கசாயம் அருந்திவந்தால் டெங்கு காய்ச்சல் குணமடையும்.

2. மலைவேம்பு இலைச்சாறு பருகி வந்தால் டெங்கின் தீவிரத்தை

குறைக்க முடியும்.

3. டெங்கு காய்ச்சல் இருக்கும் போது பிளேட் லெட் செல் மிகவும் அதி தீவிரமாக குறைந்துவிடும். இந்தப் பிளேட்லெட் செல்லை 12 மணி நேரத்துக்குள் அதிகப்படுத்த பப்பாளி இலை சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் பிளேட்லெட் எண்ணிக்கை 68000 லிருந்து 200000 வரை அதிகரிக்கும்.

"உரிய சிகிச்சை முறையும் கவனிப்பும் இருந்தால் டெங்கு காய்ச்சலை முற்றிலும் குணமாக்க முடியும்".


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்