Posts

அம்மை அப்பனின் வடிவம் சிவலிங்கம்

Image
மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும் திருக்கூத்துமாகவும் உள்ளது. இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே -ஆசான் திருமூலர் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழ்ச்சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டது. இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை) வடிவமே. இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே.  சிவமும், சக்தியும், நாதமும், விந்துவும் கலந்து சிவசக்தி, நாதவிந்தாகப் படைப்புக்கள் நடைபெறுகின்றன. இந்த அண்டங்கள் எல்லாம் சிவசக்தியின் வடிவாதலால் அதனை (Universe is in the form of Energy) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால், ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.  ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவவமாகிய ஓம் எனும் ஓங்காரத்தில் அக

சுவாமிகளை வணங்கும் திசை

Image
பூஜையறையில் சுவாமி விக்ரஹம் அல்லது படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். சுவாமி கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்தும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். பெண் தெய்வங்களைப் பூஜிக்கும் போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜிப்பது சிறப்பு. அதாவது பராசக்தி மற்றும் மகாலட்சுமி படங்கள் கிழக்கு நோக்கி இருந்தால் மேற்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் தெற்கு நோக்கி அமர்ந்தும் வழிபாடு செய்யலாம். அவ்வாறு அமரும் போது அம்மன் படங்களின் முன் நேருக்கு நேராகவும் அமரலாம். 

ஜீவ சமாதி மகிமை

Image
ஜீவ சமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.  பொதுவாக ஜீவ சமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் அந்த ஜீவ சமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும்.  நாம் அவற்றை வலம் வரும் போது, அந்த அதிர்வுகளானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்து விடும். பல மகான்கள் ஜீவ சமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.

யார் இந்த வாஸ்து புருஷன் ?

Image
வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து பார்க்கிறார்கள். யார் இந்த வாஸ்து புருஷன் தெரியுமா?  அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர்.  மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.

மணியடிக்க ஒரு மந்திரம்

Image
கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், தூப தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி காட்டும் போதும், வீட்டில் பூஜையிலும் மணியடிப்பது அவசியம். அப்போது,  “ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம் குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம்”  என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். சமஸ்கிருதம் தெரியாதவர்கள், “தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும். பெருமாளுக்குரிய மணியின் உச்சியில் கருடாழ்வாரும், சிவனுக்குரிய மணியில் நந்தியும் இடம் பெற்றிருக்கும். 

எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றலாம்

Image
கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும். விநாயகரை ஒரு முறையும். சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயார் அல்லது அம்பிகையை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

எந்த பிரச்சனைக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்

Image
உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும், யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே நாம் வணங்கும் தேவதைகள், தெய்வங்கள் - அவதாரங்கள், ஒரு சில காரண, காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங் க- ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர் சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் பகைவர் தொல்லை நீங்