ஆரோக்கியம் தரும் அணிகலன்கள் தமிழர் பாரம்பரியம்

நகைகள், தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும், ஆடம்பரத்திற்கும் மட்டுமே நகைகள் அணிவதில்லை. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.

நகைகள் அணிவதன் மூலம் நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

கொலுசு அணிதல் :

பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மெட்டி அணிதல் :

மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏனென்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் நமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைக்கிறது.

அரை நாண் கொடி அணிதல் :

சிறு குழந்தைக்கு இடுப்பில் அரை நாண் கொடி அணிவிப்பது வழக்கம். உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணிவிப்பதன் முக்கிய நோக்கமே உடலில் குருதி சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகவும், சமநிலையுடனும் இருக்கவே அரை நாண் கொடி பயன்படுகிறது.

மோதிரம் அணிதல் :

விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷனை குறைக்கவும், இனிமையான பேச்சு திறன் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண், பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. அதனால்தான், திருமண மோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறது

மூக்குத்தி அணிதல் :

மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும், வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்கக்கூடியதாக உள்ளது. இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும்.

காதணி அணிதல் :

காது குத்துதல் என்பது தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காது சோனையில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்துவதற்கு மட்டும்தான். வயிறு, கல்லீரல் செயல்பாட்டை தூண்டும். ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு சரியாகும்.

வளையல் அணிதல்:

வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைபாடுகளை களைவதாகும். நமது பாரம்பரியத்தில் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது. வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும், உடல் சூடு தணியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்