உடலில் ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக இருந்தால் வெளிப்படும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் !


நமது உடலுக்கு அனைத்துவிதமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். இவற்றில் ஒரு ஊட்டச்சத்து உணவின் மூலம் எளிதில் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான இந்தியர்களிடம் இந்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அது தான் இரும்புச்சத்து.

உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது இரும்புச்சத்து குறைபாடு/இரத்த சோகை ஏற்படுகிறது. நமது உடலுக்கு ஏன் இரும்புச்சத்து தேவைப்படுகிறது? இந்த இரும்புச்சத்து குறைவாக இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?

எந்த உணவுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தை உருவாக்குவதற்கு இரும்புச்சத்து அவசியமாகும். இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளன. அவை நம் நுரையீரலில் இருந்து பெறப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. இந்த இரத்த சிவப்பணுக்கள் தான் இந்த ஆக்ஸிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத்தில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. போதுமான ஆக்ஸிஜன் இல்லாதபோது, நாம் சோர்வாகவும், பலவீனமாகவும், மூச்சுத் திணறலுடனும் உணர்கிறோம்.

உடலில் இரும்புச்சத்து போதுமான அளவு இல்லாவிட்டால், இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவும் ஹீமோகுளோபின் என்னும் புரதத்தை உருவாக்க முடியாமல் போகும். இயற்கையாகவே இரத்த சிவப்பணுக்களால் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்ச முடியாது.

இரும்புச்சத்து குறைபாடு/இரத்த சோகையின் அறிகுறிகள்



லேசான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. ஆனால் இது மிகவும் தீவிரமாகும் போது, பின்வரும் அறிகுறிகளை சந்திக்கக்கூடும்.

* களைப்பு

* பலவீனம்

* வெளிரிய/மஞ்சள் நிற தோல்

* சீரற்ற இதயத் துடிப்பு

* மூச்சுத்திணறல்

* தலைச்சுற்றல்/மயக்கம்

* நெஞ்சு வலி, தசை வலி

* கை, கால்கள் குளிர்ச்சியுடன் இருப்பது

* நகங்களில் பிளவுகள், எளிதில் உடைவது, தலைமுடி உதிர்வது

* வாயின் ஓரங்களில் பிளவுகள்

* நாக்குகளில் புண் அல்லது காயம்

* தூங்கும் போது கால்களில் குடைச்சல்

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் என்ன நடக்கும்?



* அடிக்கடி பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும்.

* மன இறுக்கத்தால் அவதிப்படக்கூடும்.

* நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும்.

* தொற்றுக்களின் அபாயம் அதிகரிக்கும்.

* கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் ஏற்படக்கூடும்.

* பிறக்கும் குழந்தை எடை குறைவுடன் இருக்கும்.

* இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதால், இதய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

* குறைவான இரும்புச்சத்தின் எண்ணிக்கை குழந்தைகளின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும்.

இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு கண்டறிவது?



உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதை சில இரத்த பரிசோதனைகளின் மூலம் மருத்துவர் கண்டறிவார். மேலும் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க ஒருசிலவற்றைப் பரிந்துரைப்பார். அதோடு இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி உதவும் என்பதால், வைட்டமின் சி எடுக்க பரிந்துரைப்பார்.

இரும்புச்சத்து சப்ளிமெண்ட்டுகளின் விளைவுகள்



பொதுவாக, மருத்துவர்கள் இரும்புச்சத்து குறைபாடு இரத்தசோகையை மருந்துகளின் மூலம் சரிசெய்வார். உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தால், நீங்கள் சற்று நன்றாக உணர ஆரம்பிப்பீர்கள். எக்காரணம் கொண்டும் சுயமாக மருந்துகளை எடுக்காதீர்கள். இரும்புச்சத்து சப்ளிமெண்ட்டுகளை சில மாதங்கள் அல்லது உடலில் போதுமான இரும்புச்சத்து கிடைக்கும் வரை எடுக்க வேண்டியிருக்கும். இரும்புச்சத்து சப்ளிமெண்ட்டுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவை உண்டாக்கும். அதில் இந்த சப்ளிமெண்ட்டுகளை எடுப்பவர்கள் மலச்சிக்கலில் இருந்து குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், அடர் நிற மலம் வரை பல பிரச்சனைகளை சந்திக்கலாம்.

வேறு சிறந்த வழி



இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்ய இரும்புச்சத்து சப்ளிமெண்ட்டுகளைத் தவிர, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலமும் சரிசெய்யலாம். இந்த உணவுகளின் பட்டியலில் உலர் பழங்கள், பட்டாணி போன்றவற்றை சாப்பிடலாம். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதால், அதை அதிகரிப்பதற்கு அதற்கேற்ப சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். இப்போது எந்த உணவுகளில் எல்லாம் இரும்புச்சத்து உள்ளது என்பதைக் காண்போம்.

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள்



* சிக்கன், வான்கோழி, வாத்து மற்றும் கடல்சிப்பி

* மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி

* அடர் பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, பசலைக்கீரை, கேல் கீரை

* பட்டாணி மற்றும் அனைத்து வகையான பீன்ஸ்கள்

* இரும்புச்சத்து நிறைந்த செரில்கள் மற்றும் பிற தானியங்கள்

* உலர் பழங்களான பீச், கொடிமுந்திரி, ஆப்ரிகாட், அத்திப்பழம் மற்றும் உலர் திராட்சை

* கடல் உணவுகளான மட்டி (shellfish), கடல்சிப்பி (oysters), மஸ்ஸல் (mussels), கிளாம் (clams)

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி