உங்கள் காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கின் அர்த்தம் என்ன தெரியுமா..?

நமது காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் எதற்காக எரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


தற்போது உள்ள கால கட்டத்தில் நவீன யுக கார்கள் பல்வேறு வசதிகளுடன் வருவதால் உரிமையாளர்கள் கார்களில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு எச்சரிக்கை விளக்குகளை வழங்குகின்றன ஆனால் அந்த எச்சரிக்கை விளக்குகளுக்கு என்ன அர்த்தம் என்பது புரியாமல் சிலர் குழம்பி கொள்கின்றனர். எனவே பெரும்பாலான கார்களில் காணப்படும் பொதுவான எச்சரிக்கை விளக்குகளை பற்றி இந்த செய்தியில் வழங்கபட்டுள்ளது.

டோர் ஓபன் வார்னிங் லைட்

உங்கள் காரில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதவுகள் சரியாக மூடப்படாத பட்சத்தில் இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிறும் மேலும் ஒரு சில கார்களில் எந்த கதவை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற சரியான தகவலும் காட்டப்படும்.


வாஷர் ஃப்ளூயிட் ரிமைண்டர்

இந்த விளக்குகள் வைப்பர் திரவு அளவு மிகவும் குறைவான நிலைக்கு செல்லும்போது எரியும், ஆனால் பிரீமியம் கார்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை விளக்கு பொதுவாக காணப்படும்.

ஏபிஎஸ் லைட்

இந்த விளக்குகள் காரின் ஏபிஎஸ் பிரேக்கில் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கோளாறுகள் இருந்தால், எரியும். ஆனால் ஏபிஎஸ் பிரேக்கில் உள்ள கோளாறுகளை மட்டுமே இது குறிக்கும் மற்றப்படி இந்த விளக்கு எரிவதால், வழக்கமான பிரேக்கிங் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம் கிடையாது.


க்ரூஸ் கண்ட்ரோல் லைட்

நீங்கள் உங்களின் காரில் க்ரூஸ் கண்ட்ரோலை ஆக்டிவேட் செய்திருக்கும் போது மட்டுமே இந்த விளக்கு ஒளிரும்.


ஆட்டோமேட்டிக் ஷிஃப்ட் லாக்

உங்களின் கார் ஆட்டோமேட்டிக் கார் என்றால் நீங்கள் நியூட்ரலில் இருந்து கியருக்கு மாறும்போது பிரேக்கை அழுத்த வேண்டும், ஆனால் பிரேக் பெடலை நீங்கள் அழுத்தாமல், நியூட்ரலில் இருந்து கியருக்கு மாற முயற்சித்தால், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.

டிராக்ஸன் கண்ட்ரோல் ஐகான்

டிராக்ஸன் கண்ட்ரோல் வசதி தற்போது ஏராளமான கார்களில் உள்ள நிலையில் கார்களில் டிராக்ஸன் கண்ட்ரோலை டிஆக்டிவேட் செய்வதற்கான வசதிகளும் இருப்பதால் நீங்கள் அவ்வாறு செய்யும்போது கன்சோலில் இந்த ஐகான் தோன்றும்.


பனி விளக்கு ஐகான்

நீங்கள் உங்களின் காரில் பனி விளக்குகளை ஸ்விட்ச் ஆன் செய்யும்போது, ஸ்பீடோமீட்டர் கன்சோலில் இந்த ஐகான் தோன்றும்.


டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஐகான்

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் தற்போது பல்வேறு கார்களில் உள்ள நிலையில் காரின் ஏதேனும் ஒரு டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தாலோ அல்லது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலோ இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.

ஏர்பேக் ஐகான்

காரின் ஏர்பேக் சிஸ்டமில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் காரை ஸ்டார்ட் செய்த பிறகும் கூட, இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் பட்சதில் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு சென்று சரி செய்து கொள்ளலாம்.

சீட் பெல்ட் வார்னிங்

இது தான் பெரும்பாலான கார்களின் ஸ்பீடோமீட்டர் கன்சோலில் பொதுவாக காணப்படும் எச்சரிக்கை விளக்கு. நீங்கள் காரை ஓட்டும்போது சீட்பெல்ட் அணியவில்லை என்றால், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.

உங்கள் காரில் இருக்க கூடிய ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கின் சரியான அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், காரின் உரிமையாளர் கையேட்டை பார்ப்பது சிறந்ததாக இருக்கும் என்பதால் நீங்கள் உங்களுடைய காரில் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது, உரிமையாளர் கையேட்டை கையிலேயே வைத்து கொள்வதும் நல்லது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி