BREAKING: பேருந்துகளில் இலவசம். தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயணத்துக்கான டோக்கனை முதியோர் பெறலாம். அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10 வீதம் ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படும். மேலும் mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்