உங்கள் ராசிப்படி எந்த நிற ராசிக்கல் அணிய வேண்டும் 'இதன் பயன்கள் என்ன முழு தகவல் உள்ளே

ஜோதிட ரீதியாக நாம் பார்த்தல் பலன்கள் பல முறையில் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்றான 'ராசிக்கல்' எதற்காக பயன்படுத்த வேண்டும்? எந்த ராசிக்காரர்கள் எந்த நிற கல் பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். இதை முழுமையாக நாம் அறிந்து கொண்டாலே போதும். ராசிக்கல் என்ற பெயரில் நம்மை ஏமாற்றுபவர்களிடம் இருந்து நாம் தப்பித்து விடலாம். மேலும் வீண் பணச்செலவு மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றில் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம்.


  • நோய்:

நமக்கு உடல் உறுப்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான கிரகத்தின் தன்மையை அறிந்து அந்த கற்களை மோதிரமாகவோ அல்லது வேறு எதுவும் நகைகளாகவோ நாம் அணிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அணிந்தால் நம் உடலில் ஏற்பட்ட நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடலாம்.

  • கண் திருஷ்டி:

கல்லடியை விட கண்ணடி தான் பெரியது. அதனால் 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று சொல்கின்றனர். இவ்வாறு கண்ணடி இருந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையாது. அதனால் கண் திருஷ்டியை போக்க நம் ராசிக்கு ஏற்ற உரிய கல் என்ன என்பதை அறிந்து அதன் படி ராசிக்கல் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஒவ்வொருவரின் ராசி அதிபதியின் தன்மைக்கு ஏற்ப கற்களின் நிறம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ராசி அதிபதிக்கு ஏற்ப கற்களை அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


ராசிப்படி ராசிக்கல் அணியும் முறை:

  • மேஷம் - பவளம்
  • ரிஷபம் - வைரம்
  • மிதுனம் - மரகத பச்சை
  • கடகம் - முத்து
  • சிம்மம் - மாணிக்கம்
  • கன்னி - மரகத பச்சை
  • துலாம் - வைரம்
  • விருச்சகம் - பவளம்
  • தனுசு - புஷ்பராகம்
  • மகரம் - நீலம்
  • கும்பம் - நீலம்
  • மீனம் - புஷ்பராகம்

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்