'ஆ.. செம காரம்"னு = ஒதுக்கிறாதீங்க..! சைனஸ் வயிற்று பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பலவற்றிற்கு தீர்வு இருக்கு..!!

பொதுவாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாயை அனைவரும் பார்த்திருப்போம், சமையலில் சேர்த்திருப்போம். ஆனால் சாப்பிடும் போது அதனை ஒதுக்கி விட்டு தான் சாப்பிடுவோம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள்.


பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும்.

இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

மூக்கின் சளிச்சவ்வை தூண்டுவதால் நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். இதனால் சைனஸ் பிரச்னை, தலையில் நீர் கோர்த்துக்கொண்டிருந்தாலும் மூக்கின் வழியாக வெளியேற்றிவிடும்.

பச்சை மிளகாய் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு உடலின் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை பச்சை மிளகாய்க்கு உண்டு.

இரும்பு சத்தை இயற்கையாகவே அதிகம் கொண்டிருக்கும் பச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.


பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.

பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.

உடல் வெப்பத்தைக் குறைத்து குளுர்ச்சியளிக்கக் கூடியது. அதனால்தான் இந்தியாவில் முன்னோர்கள் பச்சை மிளகாய் காரம் என்றாலும் வெயில் காலத்திலும் பயன்படுத்தும் பழக்கத்தை தொடர்ந்தனர்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்