நந்தியின் காதுகளில் வேண்டலாமா ?

நந்தியின் காதில் மந்திரம் சொல்வது என்பது ஆகமத்தில் இல்லை. ஆனாலும், பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை சிவனிடமே நேரிடையாகச் சொல்வதாகப் பாவித்து நந்தியின் காதில் தங்கள் கோரிக்கைகளைச் சொல்வது பல ஆலயங்களிலும் காணப்படுகிறது. இதை சாஸ்திரம் தடுக்கவில்லை. தொடாமலேயே நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம், 



ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு சிலையையும் பக்தர்கள் தொடக்கூடாது. சிவ பக்தரான நந்திகேஸ்வரர் என்பவரும் நமது பார்வையில் ஓர் தெய்வம்தான். ஆகவே, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திகேஸ்வரரை கையால் தொடுவது சரியல்ல.


பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்