Posts

Showing posts from November, 2020

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார்.

Image
அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60. உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

வட தமிழகத்தில் கன மழை தொடரும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

Image
தீவிர புயல் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து அதிக மழையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை , அதி தீவிர புயலாக நள்ளிரவு கரையைக் கடக்கத்தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து  நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து  இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:   அதி தீவிர புயல் நிவர், புதுவை அருகே நேற்று இரவு 11.30 மணிக்கும் இன்று அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்திற்கு இடையே கரையக் கடந்தது. தற்போது அது வலுவிழந்து தீவிர புயலாக உள்ளது. தொடர்ந்து இந்தப் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழை தொடரும். பலத்த காற்றும் வீசக்கூடும்” என்றார். 

இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் - தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் தகவல்

Image
இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என் பிரதான் தகவல் தெரிவித்து உள்ளார். சென்னை வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40கி.மீ வேகத்தில் வீசுகிறது. சென்னையில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இரவு எட்டு மணிக்கு பிறகே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கும். இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என் பிரதான் தகவல் தெரிவித்து உள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது  தமிழகத்தில் பல ஊர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பேர் பே

நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Image
நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது.நேற்று காலை புயலாக வலுவடைந்தது.இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை என தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.இந்நிலையில் சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்...

Image
வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை , வங்க கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கடந்து செல்லும்போது கடலோர மாவட்டங்களில், 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  இதேபோன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நிவர் புயல் எதிரொலியாக இன்று 3 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு, மோட்டார் இயந்திரங்கள், கடலோர காவல் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தமிழக காவல் து

நிவர் புயலால் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யும் இடங்கள் எவை?

Image
‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, ‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 24-ந் தேதி (இன்று) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை? நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 25-ந் தேதி (நாளை) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை? நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும். திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மப

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Image
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.  இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். இந்த புயலுக்கு ‘நிவர் புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,  கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் சீற்றம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புயல் மற்றும் கனமழையை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்ட

சபரிமலை பற்றிய சிறப்பு தகவல்கள்

Image
கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவில், மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வருகை தருவார்கள். அதுவும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டும் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாடு நடைபெற உள்ளது. எனவே வருகிற கார்த்திகை 1-ந் தேதி முதல் பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்வார்கள். இந்தக் கோவிலின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். * சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மேற்கூரைப் பகுதியில் ‘ தத்துவமசி ’ என்று எழுதப்பட்டிருக்கும். இதற்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே இருக்கிறாய்’ என்பது பொருளாகும். * சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள், 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. * சபரிமலை ஐயப்பனை நினைத்து மாலை அணிபவர்கள், அந்த மாலை தன் நெஞ்சில் படும்போதெல்லாம், ஐயப்பன் நம் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணர்வதாக